வில்லியம் ஓல்ட் கல்வி அபிவிருத்தி நிதியத்தினால்” மாணவர்களுக்கு நிதிவழங்கிவைப்பு

(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் “வில்லியல் ஓல்ட் கல்வி அபிவிருத்தி நிதியத்தினால்”  மாணவர்களுக்கு புலமைப்பரீட்சை பணம் வழங்கிவைக்கப்பட்டது.மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் இன்று(29.6.2017) காலை பத்து மணியளவில் கல்லூரியின் காட்மண்ட் மண்டபத்தில் நடைபெற்றது..
மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 203 ஆம் ஆண்டை முன்னிட்டு இக்கல்லூரியின் வில்லியல் ஓல்ட் கல்வி அபிவிருத்தி நிதியத்தினால் இப்பணம் பதினொன்று மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.1500 ரூபா வீதம்  ஒன்பது மாணவர்களுக்கும்,ஆயிரம் ரூபா வீதம் இரண்டு மாணவர்களுக்கும் மொத்தமாக  பதினொரு மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வில்லியம் ஓல்ட் கல்வி அபிவிருத்தி நிதியமானது வருடம் ஒன்றுக்கு மூன்று இலட்சம்(300,000)ரூபாவை க.பொ.(சா/தா), க.பொ.த.(உ/த),புலமைப்பரீட்சை போன்றவற்றில் மேலதிக வகுப்புக்களை நாடாத்துதல்,பாடசாலையின் ஏனைய தேவைகளை நிறைவேற்றல்,போன்றவற்றை முழுமையாக நிறைவேற்றுவது குறிப்பிடத்தக்கதாகும்.இவற்றோடு இணைந்து பாடசாலை அபிவிருத்தி சங்கம்,பழைய மாணவர் சங்கம்,சென்றலைட் விளையாட்டுக்கழகம்,ஐரோப்பிய பழைய மாணவர்சங்கம் போன்றன கல்லூரிக்கு காத்திரமான பங்களிப்பை செய்து வருகின்றது.இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி பீ.இளங்கோ,வில்லியம் ஓல்ட் நிதியத்தின் ஆலோசகர் எஸ்.பகீரதன்,பொறியியலாளர் வை.கோபிநாத்,பழைய மாணவ சங்கத்தலைவர் எஸ்.சசிகரன்,பிரதியதிபர்களான இ.பாஸ்கர்,எஸ்.லோகராசா,உப அதிபர்களான கே.சசிகாந்,எஸ்.சதீஸ்வரன் உட்பட ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.