மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மாணவர்களுக்கு பயிற்சி பாசறை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களுக்கான மூன்று நாள் பயிற்சி பாசறை அண்மையில் கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
வலயமட்ட விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, வெற்றிபெற்று மாகாணமட்ட போட்டிக்கு தெரிவான மாணவர்களுக்காக இப்பயிற்சி பாசறை ஒழுங்குசெய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.