கிரான் மஹா காளி அம்பாள் ஆலயத்தின் எண்ணெய்க்காப்பு

மட்டக்களப்பு – கிரான் மஹா காளி அம்பாள் ஆலய ஆவர்த்தப் பிரதிஷ்ட அஷ்டபந்தன நவகுண்டபட்ஷ மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனத்தினை முன்னிட்டு இன்று எண்ணெய்காப்பு இடம்பெற்றது.

மஹாகாளி அம்பாள் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு 26ஆம் திகதியில் இருந்து 28ஆம் திகதி வரை கரும கிரிகைகள் இடம்பெற்றதுடன், இன்று காலை 9 மணியளவில் ஆரம்பித்த எண்ணெய்க்காப்பு பிற்பகல் 5 மணி வரை தொடரவுள்ளது.

ஆலயத்தின் எண்ணெய்க்காப்பு நிகழ்வுக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் அன்னை மஹா காளி அம்பாளின் இறைசேவையிலுள்ள அரங்காவலர்கள் நேர்த்தியான முறையில் ஒழுங்குபடுத்தியிருந்தனர்.

இன்றைய எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வுக்கு பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு நடைபெற்ற கிரிகை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை நாளை (30) காலை 6 மணிக்கு விநாயகர் பூசையுடன் ஆரம்பமாகி அன்னை ஸ்ரீ கிரான் மஹா காளி அம்பாள் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது..