பாண்டிருப்பில் 102 வயது ஆச்சி உயிரிழந்தார்

பாண்டிருப்பில் 102 வயது வரை ஆரோக்கியமாய் வாழ்ந்த செல்லப்பா வள்ளியம்மை ஆச்சி (இன்று29 வியாழக்கிழமை) இயற்கையெய்தினார்.

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன் வீதியில் வசித்துவந்த இவர் 1915 – 10 – 21 இல் பிறந்துள்ளார். இவருக்கு 4 பிள்ளைகளும், 19 பேரப்பிள்ளைகளும், 52 புட்டப்பிள்ளைகளும், 23 கொள்ளுப்பிள்ளைகளும் உள்ளனர்.

வள்ளியம்மை ஆச்சியை கடந்த மகளிர் தினமன்று அவரது வீடு சென்று பொன்னாடை போர்த்தி கௌரவித்திருந்தேன். அத்துடன் ஊடகங்கள் வாயிலாகவும் மிகவும் வயது கூடிய ஆச்சி ஒருவர் வாழ்ந்து வருவதுபற்றிய செய்தியினை அனைவருக்கும் தெரியப்படுத்தியிருந்தேன்

நேற்று(28) புதன்கிழமை தனது அன்றாடக் கடமையினை முடித்து விட்டு வீட்டுப்படியேறியவர் தவறி வீழ்ந்ததினால் ஏற்பட்ட உடல் உபாதை காரணமாகவே இவ் ஆச்சி உயிரிழந்துள்ளார்.

Thujiyanthan Sellathamby.