பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலயத்தில் இன்று பின்னிரவு ஆனிஉத்தர பூசை

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஆலயமாகவும், கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகவும் போற்றப்படுகின்ற பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 23ம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

 
உற்சவத்தின் மிக முக்கிய பூசையாக குறிப்பிடப்படுகின்ற ஆனிஉத்தர பூசை இன்று(29) வியாழக்கிழமை பின்னிரவு (வெள்ளிக்கிழமை அதிகாலை) இடம்பெறவிருக்கின்றது. மேலும் தேசத்துப்பொங்கல் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்று மறுநாள் காலை கொடியிறக்கத்துடன் ஆலய உற்சவம் நிறைவுபெறவிருப்பதாக ஆலய பரிபாலன சபையினர் குறிப்பிட்டனர்.