பேனாச்சி குடி மக்களின் திருவிழா

(படுவான் பாலகன்) மட்டக்களப்பின் சிறப்பு வரலாற்று பெருமைமிகு களுதாவளை சுயம்பு லிங்கப்பெருமானுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் மஹோற்சத்தின் 7ம் நாளாகிய நேற்று (27) பேனாச்சி குடி மக்களால் சிறப்பாக திருவிழா நடைபெற்றது. பல ஆயிரக்கணக்கான அடியார்கள்களின் ஆரோகரா என்ற ஒலியோடு எம்பெருமானது வெளி வீதியூர்வலம் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடக்கூடியது.