போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

(படுவான் பாலகன்) பாடசாலை மாணவர்களுக்கான போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

 
இதன் போது, “போதைப்பொருள் நுகர வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் மாணவர்களுக்கு உறுதிமொழிகள் வழங்கப்பட்டு, அவர்களிடமிருந்து சத்தியப்பிரமாணமும் பெறப்பட்டது.
பாடசாலை மாணவர்களிடத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும், சமூர்த்தி திணைக்களமும் இணைந்து பாடசாலைகள் தோறும் நடாத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 
இந்நிகழ்வில் மாவடிமுன்மாரி சமூர்த்தி வங்கி முகாமையாளர் சீ.ரவீந்திரன் அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலய அதிபர் செ.சிவநடேஸ், ஆசிரியர் செ.ஸ்ரீதரன், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

 
போதைப்பொருள் பாவணையால் ஏற்படும் பாதிப்புக்கள் அதன் பக்க விளைவுகள், மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை எவ்வாறு உள்ளது என்பது தொடர்பிலும் வீடியோக்காட்சிகள் மூலம் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.