களுதாவளை சுயம்புலிங்கத்திற்கு மஹோற்சவம்

(படுவான் பாலகன்) மீனினங்கள் கொட்டமிடும் வாவிகள் சூழ் வனப்புமிகு அழகிய இயற்கை எழிலதனில் களுதாவளை எனும் அழகிய கிராமத்தில் மட்டக்களப்பு வாவியோரம் நீண்ட வரலாறு கொண்டு இரந்து வருவோருக்கு இல்லையெனாது மருந்தளித்து மாந்தரை வாழவைக்கும் எம்பெருமானுக்கு இவ்வாண்டு மஹோற்சவம் கடந்த 21.06.2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 30.06.2017 வெள்ளிக்கிழமையன்;று தீர்த்த உற்சவத்துடன் இனிதே நிறைவுபெறவுள்ளது.

21.06.2017 1ம் நாள் கோயில் திருவிழா
22.06.2107 2ம் நாள் கோயில் திருவிழா
23.06.2017 3ம் நாள் வள்ளிநாயகி குடும்ப மக்கள் திருவிழா
24.06.2017 4ம் நாள் செட்டிகுடி குடும்ப மக்கள் திருவிழா
25.06.2017 5ம் நாள் போற்றிநாச்சி குடும்ப மக்கள் திருவிழா
26.06.2017 6ம் நாள் சுரக்காய்மூர்த்தி குடும்ப மக்கள் திருவிழா
27.06.2017 7ம் நாள் பேனாச்சிகுடி மக்கள் திருவிழா
28.06.2017 8ம் நாள் பெத்தாட் கிளவி குடும்ப மக்கள் திருவிழா
29.06.2017 9ம் நாள் ஆறு குடும்பங்களும் இணைந்த பொது திருவிழா
30.06.2017 10ம் நாள் காலை 8.00 மணிக்கு பொற்சுண்ணம் இடிக்கப்பட்டு
காலை 9.00 மணிக்கு தீர்த்த உற்சவத்தையடுத்து திருப்பொன்னுஞ்சலுடன் இனிதே நிறைவுபெறவுள்ளது.

இவ்வுற்சவ காலங்களில் அடியார்களுக்கு தேவையான அன்னதானம் இந்து இளைஞர் மன்றத்தினரால் தினமும் வழங்கப்படுவதுடன் போக்குவரத்துக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடலாம்.

 

26.06.2017 அன்று நடைபெற்ற சுரக்காய்மூர்த்தி குடும்ப மக்கள் திருவிழா