மட்டக்களப்பு பிரதான அஞ்சல் அலுவலகம் இன்று பூட்டு

க.விஜயரெத்தினம்)
ஒன்றிணைந்த தபாற்தொழிற்சங்களின் கவனயீர்ப்பு போராட்டங்கள் நேற்றிரவு(26.6.2017)  முதல் நாடளாவிய ரீதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.அந்தவகையில் மட்டக்களப்பு பிரதான அஞ்சல் அலுவலகம் இன்று(27.6.2017) பூட்டுப்போட்டு நீண்டநாள் கோரிக்கைகள் இழுத்தடிக்கப்படுவதாலும்,திணைக்கள காணி,கட்டிடங்கள்,வெளியாருக்கு விற்கவுள்ளதை தடுப்பதற்காகவும்,சென்ற வருடம் செய்யப்பட்ட பணிபகிஸ்கரிப்பு போராட்டமும்,அடையாள பணிபகிஸ்கரிப்பு போராட்டங்களும் உதாசீனப்படுத்தப்பட்டிருப்பதால்,தொடர்ச்சியான   கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதையும்,இதனால் பெரும்பாலான பொதுமக்கள் தபாற்சேவை முழுமையாக மட்டக்களப்பில்  ஸ்தம்பிதமடைந்து காணப்படுவதையும் படத்தில் காணலாம்.