திருகோணமலை அனுராதபுரம் சந்தியில் கண்டன கவனஈர்ப்பு

திருகோணமலை அனுராதபுரம் சந்தியில் நேற்றுமுன்தினமிரவு நடந்ததாக கருதப்படும் திருகோணமலை மாவட்டபெண்கள் இணைய வலையமைப்பு அலுவலக உடைப்பு மற்றும் கணணி உள்ளிட்ட பொருட்கள் அபகரிப்பைக்கண்டித்து இன்று காலை 10.00 மணியளவில்  அனுராதபுரம் சந்தியில் கண்டன கவனஈர்ப்பு  நடவடிக்கை இடம்பெற்றது.

  இந்நடவடிக்கையில் தென்பகுதி   நாம் பெண்கள் அமைப்பு   உட்பட பல அமைப்பு பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தமது கண்டனத்தை வெளியிட்டனர்.  அலுவலக உடைப்பு மற்றும் களவு சம்பவம்   தொடர்பாக உப்புவெளி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். நேற்றய தினம் தடயவியல் விசாரணைகளை பொலிஸ் குளுவினர் மேற்கொண்டனர்.

இதன்போது கைவிரல் அடையாளங்கள் காணப்படவில்லை ஆயினும் சந்தேக நபர் பாவித்த சிகரட் மீதி ஒன்று கண்டெடுக்கப்பட்டன. அலவலகத்தில் உள்நுழைந்தவர்கள் ஓட்டைப்பிரித்து வந்துள்ளதுடன் பல பொருட்கள் இருந்தபோதும் மடிகணணியை தேடி எடுத்துள்ளதுடன் பணியாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் எடுத்துனச்சென்றுள்ளனர்.மேலதிக விசாரணைகள பொலிசார் மேற்கொண்டுள்ளனர்..