பாடசாலையின் வளங்களை அதிகரிப்பதாகவிருந்தால், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

(படுவான் பாலகன்) பாடசாலையின் வளங்களை அதிகரிப்பதாகவிருந்தால், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட படையாண்டவெளி பாடசாலையில் புதிய கட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில்

கட்டடங்களோ, ஏனைய வளங்களோ மாணவர்களின் எண்ணிக்கையை மையமாக கொண்டுதான் பாடசாலைகளுக்கு வழங்கப்படும். மாணவர்கள் குறைவாக இருக்கின்ற போது, வளங்களும் குறைந்தளவே வழங்கப்படும்.

மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட 50மாணவர்களுக்கு குறைவான எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளில் படையாண்டவெளி பாடசாலையும் உள்ளடங்குகின்றன.

படையாண்டவெளி கிராமத்திலே 100க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ள போதிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றமை சவாலான விடயமேயாகும். இவ்வாறான நிலை தொடர்ந்தால், பாடசாலைகள் சிலவற்றினை மூட வேண்டிய நிலையும் ஏற்படும். எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் கிழக்கு மாகாணத்தில் சனத்தொகையிலும் தமிழ் மக்கள் பின்நிலைக்கு தள்ளப்படுவர்.

பாடசாலையின் வளங்களை அதிகரிப்பதாகவிருந்தால், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். என்றார்.