சிங்கள தமிழ் மக்கள் ஒன்றுபடவேண்டிய காலமிது! விகாராதிபதி ஆனந்த சேனாதிபதி

ஆலையடிவேம்பில் குமாரிகம விகாராதிபதி ஆனந்த சேனாதிபதி அறைகூவல்!*
(காரைதீவு   சகா)

சில இனவாதிகளால் எதிர்காலத்தில் இலங்கைக்கு ஆபத்து ஏற்படக்கூடிய
சாத்தியம் இருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த சமாதானத்திற்கு இது ஒரு
பெரும்சவால்.அந்த சவாலை முறியடிக்க பௌத்த இந்து மதத்தால் கலாசாரத்தால்
ஒன்றுபட்டிருக்கின்ற சிங்கள தமிழ் மக்கள் ஒன்றுபடவேண்டும்..

இவ்வாறு ஆலையடிவேம்பு கால்நடை பாற்பண்ணையாளர் விவசாயக்கூட்டுறவுச்சங்கத்தின்
அங்கத்தவர்களுக்கு சீருடைவழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அம்பாறை  குமாரிகம
விகாராதிபதி வண. ஆனந்த சேனாதிபதி தேரர் உரையாற்றுகையில் அறைகூவல் விடுத்தார்.*

இந்நிகழ்வு சங்கத்தின் தலைவர் அழகையா முருகன் தலைமையில் சங்கத்தின்தலைமையகம்
அமைந்துள்ள கோளாவிலில் நேற்று  மாலை நடைபெற்றது.*

நிகழ்வில் முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினரும் சங்கத்தின் செயலாளருமான
சோமசுந்தரம்புஸ்பராசா ஸ்ரீலங்காசுதந்திரக்கட்சியின் காரைதீவுப்பிரதேச
இணைப்பாளர் வீரகத்திகிருஸ்ணமூர்த்தி வனபரிபாலனத்திணைக்களத்தின் சுற்று
வனஅதிகாரி கே.ராம்குமார் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.*

வட்டமடு பிரதேசத்துள் தமது கால்நடைகளைப்பராமரிக்கச் செல்கின்றபோது
பாற்பண்ணையாளர்கள் வனபரிபாலனத்திணைக்கள அதிகாரிகளால்  இனங்காணப்படுவதற்காக
சீருடை அறிமுகம்செய்துவைக்கப்பட்டது. அதிதிகள் அவற்றை சகல அங்கத்தவர்களுக்கும்
வழங்கிவைத்தனர்.*

அங்கு வண.ஆனந்த சேனாதிபதி தேரர் உரையாற்றுகையில்:*
இந்து பௌத்த மதங்களுக்கிடையில் மதவேறுபாடு இல்லை. கலாசாரத்திலும் வேறுபாடு
இல்லை. இருந்தபோதிலும் நாட்டின் கடந்தகால அரசியல்நிலைமைகள் இருசமுகத்தினரையும்
பிரித்துவைத்தது. அதுமட்டுமல்ல யுத்தகாலத்திலும் அது
பிரித்துப்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்று நல்லாட்சி நிலவுகின்ற காலம். அதற்கு வலுச்சேர்ப்பதானால் இனங்கள்
ஜக்கியமாக வாழவேண்டும். அதற்கு குந்தகமாக நிற்போரை மக்கள் இனங்கண்டு
ஒதுக்கவேண்டும்.*
தமிழ்அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள்?*
*இன்று தமிழ்அரசியல்வாதிகள் எதிர்க்கட்சித்தலைவராகவும் குழுக்களின்
பிரதித்தலைவராகவும் ஆளுந்தரப்பிலுள்ளனர்.கிழக்குமாகாணசபையிலும் உள்ளனர்.*
*ஆனால் வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்கள் இன்னொரன்ன பிரச்சினகளுக்கு
அன்றாடம் முகங்கொடுத்துவருகின்றனர். *

*குறிப்பாக இந்த வட்டமடு பிரச்சினை. கல்முனை தமிழ்பிரதேச செயலகம் தமிழ்வலயம்
இவ்வாறு பல அநீதிகள் ஏன் கிழக்கு மாகாணசபையிலும் தமிழர்களுக்கு நியமனங்கள்
இடமாற்றங்கள் பதவியுயர்வுகள் தொடர்பில் பலத்த அநீதிகள் இடம்பெற்றுவருகின்றன…*

*இவைகளுக்கு இந்ததமிழ் அரசியல்வாதிகள் குரல்கொடுத்தார்களா? அல்லது ஏதாவது
சாதித்தார்களா? எந்தப்பிரச்சினையைத் தீர்த்தார்கள்? வெறும் அறிக்கைகளை விட்டு
மக்களை உசுப்பேற்றிவருகின்றார்கள். திரு.புஸ்பராசா போன்றவர்கள் இரவுபகல்
பாராது மக்களுக்காக பாடுபடுகின்றார்கள். அவர்களை தமிழ்மக்கள் இனங்கண்டு
தலைவராக்குதல்வேண்டும். *
*இன்று வட்டமடு சுதந்திரமாகவுள்ளது!*
*வர்த்தமானி அறிவித்தலின்மூலம் கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரையாக 4000ஏக்கர்
பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதனை முPறி அங்கு சிலர்
விவசாயம்செய்யமுற்பட்டபோது அவ்வப்போது பிரச்சினைகள் எழுந்துவந்திருக்கின்றன.
நீதிமன்றிலும் வழங்குத்தாக்கல் செய்து தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளன. அதனையும்
மீறி அரசியலைப்பயன்படுத்தி சிலமுஸ்லிம்கள் உச்சக்கட்டத்தில் ஆடினர். சிலர்
வேளாண்மை செய்யமுற்பட்டனர்.செய்தனர்.*

*இந்த இடத்தில்தான் எனது உதவியைதிரு.புஸ்பராசா நாடினார். நானும் அரசாங்கஅதிபர்
மற்றும் வனபரிபாலன மாவட்ட அதிகாரி கயான் உள்ளிட்டோரைச்சந்தித்து உண்மையை
யதார்த்தத்தை விளங்கப்படுத்தினேன்.*
*ஆரம்பத்தில் அவர்கள் தயங்கினாலும் பின்னர் அவர்கள் நீதியின்பால் திரும்பி
இன்று வட்டமடு சுதந்திரபூமியாக பாற்பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை மேய்க்கும்
பூமியாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளவேண்டும். அதற்கு
நீங்களனைவரும் ஒற்றுமையாகச் செயற்படவேண்டும்.*

*வனபரிபாலன சுற்றுவன அதிகாரி கே.ராம்குமார் உரையாற்றுகையில்:*
*கடந்த காலங்களில் சட்டத்தைமீறியோரை நாம் எந்தப்பேதமுமின்றி கைதுசெய்து
மன்றில் ஒப்படைத்திருந்தோம்.பலத்த கட்டுப்பாடுகளை விதித்து கடமை
புரியநேரிட்டது. இன்று சுதந்திரமாக எமது கட்டுப்பாட்டுக்குள் வட்டமடு உள்ளது.
என்றார்.*

*கட்சி இணைப்பாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி உரையாற்றுகையில்:*
*வட்டமடு என்றால் புஸ்பராசா எனுமளவிற்கு உயிரைத்துச்சமென மதித்து இரவுபகல்
பாராது தியாகம் செய்தவர்.அவரிடம் இருக்கும் ஆவணங்கள் அம்பாறை மாவட்டத்தில்
எந்த அரசியல்வாதியிடமும் இல்லை.*
*அரசோடு நிற்கிறோம் என்றுகூறும் தமிழ்த்தலைவர்கள் வட்டமடுப்பக்கம்
தலைவைத்துப்படுத்தார்களா? விடுதலைப்புலிகளைக்கூட துரோகிகள் என்கிறார்கள்
இவர்கள். இங்கும் ஒரு எம்.பி.இருக்கிறார். வேப்பையடியிலிருந்து
அறிக்கைவிடுகிறார்கள். வட்டமடு அவர்களுக்கு எந்தஇடத்தில் இருக்கிறது என்று
தெரியுமோ தெரியாது.ஆனால் அறிக்கைவிடுவார்கள். இனியாவது தமிழ்மக்கள்
சிந்தித்துசெயற்படவேண்டும்.*

*அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு தலைமைதாங்கக்கூடிய வல்லமை அந்த ஆளுமை
திரு.புஸ்பராசாவிற்கு மட்டுமே உண்டு.அம்பாறைத்தமிழர்கள் வருகின்றதேர்தலிலாவது
சரியான தலைமையாக புஸ்பராசாவைத் தெரியுங்கள். இல்லாவிடில் இருப்பதையும் இழக்க
நேரிடும். என்றார்.*

*இறுதியில் செயலாளர் சோ.புஸ்பராசா நன்றியுரையாற்றினர்.*