மேலாதிக்கங்கள் அழிந்துபோகும் பொழுதுதான் இந்த நாட்டில் நல்லாட்சி நிலவும் .கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்

“இந்த நாட்டையே பீடித்துக்கொண்டிருக்கும் பெரிய வியாதியாக மதமேலாதிக்க வாதம் மற்றும் .இனமேலாதிக்க வாதம் உள்ளது.இந்த நாட்டினுடைய பல பிரச்சனைகளுக்கு இதுவே காரணமாக இருந்து வந்துள்ளது .அந்தவிடயம் இன்றும் பல பிரச்சனைகளுக்கு காரணமாகவுள்ளது.

இந்த மேலாதிக்கங்கள் அழிந்துபோகும் பொழுதுதான் இந்த நாட்டில் நல்லாட்சி நிலவும் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற வடமலை ராஜ்குமாரின் அல்லறுப்போம் எனும் கட்டுரைநூல் வெளியீட்டில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.

இந்நிகழ்வு ஊடகவியலாளர் பொ.சற்சிவானந்தம் தலமையில் நடைபெற்றது. வரவேற்புரையை ஊடகவியலாளர் அ.அச்சுதன் நிகழ்தினார். இங்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கு.நாகேஸ்வரன்,ஜே.ஜனாரத்தனன்,நகரசபைசெயலாளர் ஜெயவிஷ்ணு உட்பட பல இலக்கியவாதிகளும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.

இங்கு மேலும் பேசிய தண்டாயுதபாணி குறிப்பிடுகையில்,இந்த நிலமைகள் காரணமாக இந்த நாடு பாரிய பிரச்சனைகளை கடந்த காலங்களிலே எதிர் கொண்டது. ஆனால் நாங்கள் என்னதான் நல்லாட்சி நல்லாட்சி என்று சொன்னாலும் கூட இன்றைய கால கட்டத்திலும் இந்நிலமைதான் நிலவுகின்றது.

அதற்குள்ளும் நாங்கள் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில்  எங்களால் முடிந்தவற்றை நாம் செய்துகொண்டிருக்கிறோம். தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு வரகின்றோம் ஆனாலும் பலவற்றை முயற்சி செய்து தோல்வியும் கண்டிருக்கின்றோம்..

இந்த நூலிலே இந்தமாவட்டத்தில் உள்ள மக்களின் பல பிரச்சனைகள் பற்றி ராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக சம்பூர் மக்களின் பிரச்சனை மீனவர்களின் பிரச்சனைகள், குடிநிர்ப்பிரச்சனைகள் மக்களின் மீழ்குடியேற்றப்பிரச்சனைகள்  உள்ளுராட்சி மன்ற ஊழியர்களின் காணிப்பிரச்சனைகள் என பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் நாமும்  பலவிடயங்களில் சம்பந்தப்பட்டிருக்கிறோம் பலமுயற்சிகளை எடுத்துள்ளோம் . இங்கு குறிப்பிடப்பட்டுள்ள  பல பிரச்சனைகளில் தற்சமயம் பல மாற்றங்கள் உள்ளன.

ராஜ்குமார் குறிப்பிட்டிருந்தார்.இந்தக்கட்டுரைகள் தனது ஆரம்ப கால கட்டுரைகள் என. அந்தவகையில் தற்சமயம் அவர்குறிப்பிட்ட பல பிரச்சனைகளில் மாற்றங்கள் உள்ளன.ஆனாலும் பலவற்றை ஆராய வேண்டிய சூழலிலேயே இருக்கிறது

இந்த நாட்டிலேயே பெரிய தொரு மேலாதிக்க வாதம் உள்ளது.அது மதமேலாதிக்க வாதம்.இனமேலாதிக்கவாதம் ஆகும். என்னதான் நல்லாட்சி நல்லாட்சி என்று சொன்னாலும் இந்த மேலாதிக்க வாதம் இன்றும் நிலவுகின்றன. அதனை அண்மைய நீதிமன்ற நடவடிக்கைளில் நாம் பார்க்க முடிந்தது. இந்த மேலாதிக்க வாதம் தான் இந்த நாட்டினுடைய பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்துவந்தனஇன்றும் இருக்கின்றன.

அண்மையில் நடைபெற்ற நீதிமன்ற விடயங்கள்,கைது நடவடிக்கைகள் எல்லாம் பார்க்கின்ற போது ஒரு பெரிய விளையாட்டாகவே தானே தெரிகிறது.ஆகவே நீதி உண்மைஎன்பன இந்த நாட்டிலே  சரியாக கடைப்பிடிக்கப்படும் பொழுது தான்  நல்லாட்சி நிலவும்.

இந்த மத,மற்றும் இனமேலாதிக்கங்கள் அழிந்துபோகும் பொழுதுதான்  தேவையற்ற இடங்களில் பௌத்த சிலைகள் வைப்பதும் இல்லாமல் போகும். பௌத்த மக்கள் வாழாத இடங்களிலும் சிலைகள்.அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநருக்கு ஒரு கூட்டத்தில் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினேன்.

“இலங்கைத்துறைமுகத்தவாரம்  என்ற இடத்த்தில் அண்மையில் மக்களுக்கு ஒரு பாலம் திறந்து வைக்கப்பட்டது. அந்த இலங்கைத்துறைமுகத்துவாரம் என்பது ஒரு பாரம்பரியமான தமிழ்  கிராமத்தின் பெயராகும். ஆங்கு சிங்கள மக்களும் வாழவில்லை.

அது பற்றியும் இங்கு சிலர் பேசினார்கள்.அந்தப்பாலத்தை திறக்க ஜனாதிபதி அவர்கள் வருகைதந்திருந்தார்.அதுதொடர்பான கூட்டத்தில் அங்கு போடப்படும் பெயர்பலகையில்  இலங்கைத்துறை முகவத்துவாரம் என்று தமிழில் நீங்கள் போடவேண்டும். சிங்களத்தில் நீங்கள் எவ்வாறாவது போடலாம்.என்று நாம் எதிரப்பைத்தெரிவித்தோம். ஆளுநர் முன் முன்வைத்த அந்த எதிர்ப்பும் கவனிக்கப்படவில்லை.இது பற்றி எங்களுடைய தலைவர் சம்பந்தன ஐயா அவர்களுக்கும் நான் இதனைப்பற்றி முதல் நாள் நான் தெரியப்படுத்தினனான்இதற்கு எதிர்ப்பைக்காட்டும் முகமாக அந்த திறப்பவிழா நிகழ்வில் நான் கலந்துகொள்ள மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தேன். அவ்வாறே இந்நிகழ்வை நாம்புறக்கணித்தோம்.

குறித்த சந்தர்பத்தில் அங்கு வந்த அமைச்சர்களிடமும் எமது தலைவரால் சொல்லப்பட்டிருக்கிறதுசில நாட்களில் அது மாற்றப்படும் என்று சொல்லப்பட்டது அவ்வளவுதான் அது இன்னும் மாற்றப்படவில்லை.

இது இந்த நாட்டின் மேலாதிக்க வாதத்தை காட்டிநிற்கிறது. இவ்வாறான மேலாதிக்க வாதம் இந்த நாட்டிலே இருக்கும் வரையில் எமது இவ்வாறான  அடிப்படைப்பிரச்சனைகள் தீர்க்கப்படாது ஒரு இழுத்தடிக்கப்படும் நிலையிலேதான் இருக்கும்.

அந்தவகையில்  அவ்வாறான பல பிரச்சனைகளை ராஜ்குமார் அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.அவர் ஒரு சமூகவியலாளராக ஒரு சமூக அக்கறை கொண்டவராக இருந்து ஊடகத்துறையை தனக்கு ஆதரவாக பற்றிகொண்டு வருகின்றார் அவரது முயற்சி மேலும் தொடர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.