வெகு விரைவில் கேப்பாபுலவு காணி விடுவிக்கப்படும் காலவரையறை கூறமுடியாது எம் ஏ சுமந்திரன்

வெகு விரைவில் கேப்பாபுலவு காணி விடுவிக்கப்படும் என தீர்மானம் எடுக்கபட்டுள்ளது காலவரையறை தொடர்பில் எம்மால் கூறமுடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார்

கேப்பாபுலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்ட இராணுவ படைக்கட்டளை தலைமையகம் முன்பாக தமது சொந்த நிலம் கோரி கடந்த மார்ச் மாதம் 1 ம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் இன்று 1 1 7 ஆவது நாளாக இன்றும் இடம்பெறுகிறது.

இந்நிலையில் இன்று ஒட்டுசுட்டானில் சமகால அரசியல் நிலை தொடர்பில் மக்களுடனான சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் அவர்களிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேப்பாபுலவு காணி விடயம் தொடர்பில்  எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அங்கு தொடந்து கருத்து தெரிவித்த அவர்,

கேப்பாபுலவுக்கு நான் வருகைதந்தபோதும் பின்னர் சம்மந்தன் ஜயா வருகைதந்தபோதும் கேப்பாபுலவில் உள்ள இராணுவத்தளபதி 70 ஏக்கர் 2 ரூட காணி தவிர ஏனையவை விடுவிக்கப்படும் எனவும் 70 ஏக்கர் 2 ரூட விடுவிக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார்

இதுதொடர்பில் நான் ஏற்க்கனவே தெரிவித்திருந்தேன் அது நாங்கள் கொழும்பில் பேசுவதாகவும் இராணுவத்தளபதி இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் இருப்பினும் சம்மந்தன் ஜயா இங்கு வருகைதந்து சென்றதன் பின்னர் இரானுவத்தளபதியோடு பேசியபோது அந்த 7 0  ஏக்கரையும் கூட விடுவிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் ஆனால் ஜனாதிபதியிடம் இருந்து ஒரு வார்த்தை வேண்டும் என தெரிவித்திருந்தார்

நேற்றுமுன்தினம் சிறிலங்கா சுதந்திர கட்சியுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் நானும் சம்மந்தன் ஜயாவும் ஜனாதிபதியுடன் தனியாக சந்தித்து கேப்பாபுலவு தொடர்பில்  பேசியபோது இராணுவத்தளபதிக்கு தான்  கட்டளையிடுவதாக கூறினார் ஆனபடியால் அவர் அந்த உத்தரவை இட்டிருப்பார்

ஆகவே  வெகு விரைவில் கேப்பாபுலவு காணி விடுவிக்கப்படும் என தீர்மானம் எடுக்கபட்டுள்ளது ஆனால்  காலதாமதம் குறித்து நான் வாக்குறுதி அளிக்க முடியாது  இராணுவத்தினர் கட்டிடங்களை அமைத்திருக்கிறார்கள் வேறு வசதிகளை செய்திருக்கிறார்கள்

அவர்கள் இழுத்தடிப்பார்கள் நாங்கள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுப்போம் ஆனபடியால் காலவரையறை ஒன்றை எம்மால் கொடுக்கமுடியாத நிலையில் இருக்கிறோம் ஆனால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது அது நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது

ஏனென்றால் மற்ற இடங்களிலும் குறிப்பாக முள்ளிக்குளம் போன்ற இடங்களிலையும் சம்பூரிலும் காலதாமதம் ஏற்ப்பட்டது ஆனால் முடிவேடுக்கப்பட்டபடி அது நடந்தேறியிருக்கிறது ஆகையினாலே இது முழு இடமும் நிச்சயமாக விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்ப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் மேலும்  தெரிவித்தார்