தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய பொதுக்கூட்டம்.

(படுவான் பாலகன்) கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்றதும் தொன்மைவாய்ந்ததும் “சின்னக்கதிர்காமம்” என சிறப்பித்துக் கூறப்படுவதுமாகிய தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய விஷேட தேசமகாசபைக் கூட்டமானது 2017.06.25ஆம் திகதி எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை மு.ப. 9.30 மணிக்கு ஆலய முன்றலில் தலைவர் க.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபையின் செயலாளர் பொ.டிமலேஸ்வரன் தெரிவித்தார்..

ஆலய வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு இடம்பெறும் இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய விடயங்கள் ஆராயப்படவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இவ்வாலய திருவிழாக்களை நடாத்துகின்ற அனைத்து கிராம மக்களையும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார் இவ்வாலய மஹோற்சவம் எதிர்வரும் 2017.07.17ஆம் திகதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 2017.08.07ஆம் திகதி அதிகாலை தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.