படையாண்டவெளியில் புதிய வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட படையாண்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் புதிய வகுப்பறைக் கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(23) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

வித்தியாலயத்தின் அதிபர் மா.வன்னியசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம், வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் ஆகியோர் அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ், குறித்த வகுப்பறைக் கட்டடம் அமைக்கப்படவுள்ளது. 5மில்லியன் செலவில் 50அடி நீளத்திலும், 25அடி அகலத்திலும் நான்கு வகுப்பறைகளை கொண்ட இருமாடிக் இக்கட்டடமாக அமைக்கப்படவுள்ளது.
நாற்பது வருடங்களின் பின்பு, இப்பாடசாலையில் புதியதொரு கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் தற்பொழுதே நடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.