மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு.

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்கான மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(23) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

அடிக்கல்லினை மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் செ.பிரபாகரன், கிராம உத்தியோகத்தர் சி.ஜீவிதன் மற்றும் செயலக உத்தியோகத்தர்கள் நாட்டி வைத்தனர்.

கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளரின் நிதியொதுக்கீட்டின் கீழ், 2மில்லியன் ரூபாய் செலவில் குறித்த கட்டடம் அமைக்கப்படவுள்ளது.

பிரதேசத்திற்கான மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையம் இல்லாத நிலையில், தற்காலிகமாக கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான பல்நோக்கு கட்டடத்தில் மாதர் பயிற்சி நிலையம் இயங்கி வருகின்றது. இந்நிலையில் பிரதேசத்திற்கான மாதர் பயிற்சி நிலையத்திற்கான நிரந்தர கட்டடமாக இது அமையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது