ஊழல் இலஞ்சமில்லாமல் கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை நடாத்தி வருகின்றோம்.முதலமைச்சர்

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டிலான விசேட இப்தாரும், இராப்போசன நிகழ்வும் நேற்று (21) மாலை சாய்ந்தமருது ‘லீ மிறிடியன்’ ஹோட்டல் மண்டபத்தில் இடம் பெற்றது.

இங்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் கருத்துத் தெரிவிக்கையில்:-‘ அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து நான்கு சுவர்களுக்குள் எங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்பதை யதார்த்தமாக நாம் இன்று நிருபித்துக் காட்டியிருக்கின்றோம்.

எந்தவிதமான கலப்படங்களுமில்லாமல், இலஞ்சமில்லாமல், ஊழல் இல்லாமல் கிழக்கு மாகாணத்தில் ஒரு ஆட்சியை நடாத்தி வருகின்றோம். இது மாத்திரமல்லாமல் இனவாதங்கள் தூவப்படுகின்ற போது பேசப்படுகின்ற போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற ஒரு அரசியல் காலாச்சாரத்தை ஏற்படுத்தி, இந்த நாட்டுக்கே முன்னுதாரணமாக கிழக்கு மாகாணத்தை மாற்றியமைத்திருக்கின்றோம்’ எனத் தெரிவித்தார்..

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் பிரதம அதிதியாகவும், முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்திலுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், மாகாண கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள், முன்னாள் கல்விப் பணிப்பாளர்கள், பிராந்தியத்திலுள்ள உலமாக்கள், கல்விமான்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாகாணத்திலுள்ள முஸ்லிம், தமிழ், சிங்களம் என்று மும்மதத்திலுமுள்ள கல்விசார் உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் பங்கு கொண்ட இவ்விசேட நிகழ்வுகளில் தாருல் ஹூதா அரபு, இஸ்லாமிய மகளீர் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாறக் மதனி அவர்களினால் விசேட சொற்பொழிவும், துவாப் பிராத்தனையும் நிகழ்த்தப்பட்டது.