அரச அதிபர் இரால்குழிவிஜயம் மண்ணகழ்விடத்தை பார்வையிட்டார்

கங்கை மற்றும் கடல் வெள்ளத்தினாலும் தமது கிராமம் அழிவடைவதாக இரால்குழி மக்கள் அரச அதிபரிடம் முறையீட்டனர்.இன்று

மூதுார் பிரதேசத்தில் மகாவலிக்கங்கைக்கரையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மண்ணகழ்வை நேரடியாக பார்வையிடும் பொருட்டு அரசாங்க அதிபர் என்.என்.புஸ்பகுமார தலமையிலான அதிகாரிகள் குளு இன்று காலை 11மணியளவில் விஜயம் செய்தனர்.இதன்போதே இவ்விடயத்தை மக்கள் தெரிவித்தனர்..

இரால்குழிகிராமத்திற்கு விஜயம் செய்த இக்குளுவினர் படகுமூலம் மண்ணகழ்வு நடைபெறும் இடத்திற்குச்சென்று பார்வையிட்டனர். இக்குளுவில் மூதுார் பிரதேச செயலாளர் யூசுப் உட்பட பல அதிகாரிகளும் இநை்துகொண்டனர்.

கடந்த 15.06.2017 அன்று இரால்குழிபிரதேச மக்கள் இம்மண்ணகழ்வின் காரணமாக தமது கிராமம் அழிவைச்சந்திக்கும் அபாயம் இருப்பதாக விழிப்புணர்வு ஊர்வலமொன்றை நடாத்தியதுடன் அதிகாரிகளிடம் மகஜரும் கையளிக்கப்பட்டன. இதனையடுத்து கடந்த20.06.2017 அன்று நடைபெற்ற கிழக்கு மாகாண சபையிலும் இவ்விடயம் அவசரப்பிரேரணையாக முன்வைக்கப்பட்டு பலரும் உரையாற்றியதுடன் இதனை தடைசெய்யுமாறும் வெளிமாவட்டத்திற்கு அதிகளவிலான லொறிகளில் மண்எடுத்துச்செல்லப்படுவதாகவும் உறுப்பினர்கள் பலரும்  தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த அதிகாரிகள்குளு மூதுாருக்கு விஜயம் செய்து பார்வையிட்டனர். இதன்போதும் பாதிக்கப்ட்ட இரால்குழி மக்கள் நிலமைகளை தெளிவு படுத்தினர்.இதனாலும் கங்கை மற்றும் கடல் வெள்ளத்தினாலும் தமது கிராமம் அழிவடைவதனையும் சுட்டிக்காட்டினர்.