திருகோணமலை பல்கலைக்கழக சித்த மருத்துவப்பிரிவில் யோகா நிலயம் திறப்பு

2015ம் ஆண்டு யோகா தினம் என்ற ஒரு விடயம் சர்வதேச சமூகத்தால் முதலில் பிரகடனப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும் யூன் 21ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது..

அந்தவகையில் 03வது சர்வதேச யோகா தின நிகழ்வானது திருகோணமலை வளாகத்தில் வெகு சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வின் போது திருகோணமலை வளாக கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் யோகா பயிற்சிபெறும் பொருட்டு பிரத்தியேக யோகா நிலையம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வளாக முதல்வர் டாக்டர். வ. கனகசிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக இந்தியாவின் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர். எஸ். பிரகதீஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

“இந்த யோகா மையமானது திருகோணமலை வளாகத்தின் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், மாணவர்களின் நன்மை கருதி இனிவரும் நாட்களில் தினந்தோறும் காலையிலும் மாலையிலும் யோகக்கலைப்பயிய்சியை முன்னெடுக்க ஒரு மையமாக அமையும் என வளாக முதல்வர் வ.கனகசிங்கம்  தெரிவித்தார்.. இங்கு ஒரு அலகாக விளங்கும் சித்த மருத்துவத் துறையானது கடந்த ஒன்பது வருடங்களாக இயங்கி வருவதோடு பல சித்த மருத்துவர்களையும் உருவாக்கியுள்ளது. இத்துறையானது மக்களோடு ஐக்கியமாகி அவர்களின் நலனுக்காக பல சிறப்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்