மாமாங்க கோயிலானது இலங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும் இந்த கோயிலின் சிறப்பம்சம் திருவிழா இறுதிநாள் நடைபெறும் தீர்த்தமாகும் …
இத்தீர்த்தமானது தந்தையை இழந்தவர்கள் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பிதிர்கடன் தீர்க்கும் தீர்த்தமாகும்..
இந்த பிதிர்கடன் தீர்ப்பதற்காக கோயிலின் புனித தீர்த்த குளத்தில் தீர்த்தமாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் அதேபோல புலம்பெயர்ந்து வாழும் நம் உறவுகளும் சேர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வருகின்றனர்.
இங்கு வரும் மக்கள் தீர்த்தமாடிய பின்னர் குளத்து நீர் சேறும் சகதியுமாக இருப்பதால் குளத்தில் இருந்து வெளிவரும்போது சேறு படிந்த உடலோடும் ஆடைகளோடும் வெளியில் வருகின்றனர் இவ்வாறு வரும் பெருமளவிலான மக்கள் வேறு பிரதேசங்களில் இருந்து வந்தவர்களாதலால் வெளியில் கிணற்று நீரிலும் நீராட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
தீர்த்தமாடுபவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் வயதானவர்களாகவே காணப்படுகின்றனர் இவர்கள் கிணற்றில் நீண்ட நேரம் காத்து நிற்பதையும் காணக்கிடைக்கிறது
ஆனாலும் ஆலய வளவினுள் சனத்தொகைக்கு ஏற்றால் போல கிணறுகள் இல்லை அதேவேளை இருக்கும் கிணற்றுக்கும் ஒழுங்கான முறையில் துலா கம்பி இடைப்பட்டும் இல்லை அங்கு வரும் சனத்தொகைக்கு ஏற்றால்போல உறுதி தன்மையும் இல்லை கடந்த வருட திருவிழாவின் போது முடிச்சுக்கள் இடைப்பட்ட சைக்கிள் சங்கிலியே போடப்பட்டிருந்தது.
பல வயதான பெண்கள் தீர்த்தம் ஆடி விட்டு வெளியில் நீராட இடம் இல்லாததால் சேறு பூசப்பட்ட ஈர சேலையுடன் பேருந்திலும் பயணிப்பதை காணக்கூடியதாகவும் இருக்கின்றது
ராஜ கோபுரம் சித்திர தேர் என்பவற்றுக்கு மக்களிடம் பணம் அறவிடும் நாம் அந்த பணத்தை தரும் பக்தர்களின் நலனிலும் கவனம் செலுத்த வேண்டுமல்லவா ?
கால ஓட்டம் நவீன மயமாக ஓடிக்கொண்டு இருப்பதாலும் நேர அளவுகளும் குறைவாக உள்ளதாலும்
இந்த கோரிக்கையை நீங்கள் கவனமெடுத்தால் ஆலய பின்புறமோ அல்லது வசதியான ஒரு இடத்தில் ஒரே நேர்கோட்டில் ஐம்பது குளியல் Shower களை பொருத்தி அதற்காக நீர் விநியோக அமைப்பை ஏற்படுத்தினால் அந்த பக்த்தர்கள் தீர்த்தமாடிய பின்னர் அதில் நீராடி மற்றைய ஆயத்த வேலைகளை செய்யலாம் அல்லவா.
அல்லது தற்காலிகமாக கழற்றி பூட்டக்கூடிய வகையிலும் திருவிழா காலங்களில் மட்டும் பொருத்தக்கூடிய வகையில் உபகரணங்களை வாங்கி வைத்தும் கொள்ளலாம்.
இந்த ஐம்பது குளியல் Shower களை அமைக்க பாரிய நிதி தேவையும் இல்லை தயவு செய்து இதை இம்முறை கவனத்தில் எடுத்து பக்த்தர்களின் அசௌகரியங்களை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் நல்லது.
இந்த செயல்பாட்டை செய்தால் பல பிரதேசங்களில் இருந்து சுற்றுலா வரும் பாடசாலை மாணவர்களுக்கும் தூர பிரதேசத்தில் இருந்துவரும் கதிர்காம யாத்திரியர்களுக்கும் பெருமளவில் பயனுள்ளதாக அமையும் என்பதோடு மற்றைய சைவ கோயிலுகளுக்கும் முன்மாதிரியாகவும் திகழலாம்.
“இது பிழை கூறுவதற்காக இல்லை இப்படி இருந்தால் நல்லது என்ற ஒரு வேண்டுகோளுக்காக மட்டுமே ”
நண்பர்கள் இதை நிர்வாகத்திடம் கொண்டு சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது
“மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”l
Thanks