துறைநீலாவணையில் இரண்டுபேர் டெங்கு நோயாளியாக இணங்காணப்பட்டுள்ளார்கள்

க.விஜயரெத்தினம்)
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணையில் டெங்கு நோயாளர்கள் இருவர் இரத்தப்பரிசோதனை மூலம் நேற்றையதினம்(21.6.2017)  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர் வீ.வேணிதரன் தெரிவித்தார்.
துறைநீலாவணையில் டெங்கு நோயாலாளர்கள் இருவர் கண்டுபிடிக்கப்பட்டதையீட்டு களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஸ்ணகுமார் அவர்களின் வழிகாட்டல்களிலும்,ஆலோசனையின் பேரிலும் துறைநீலாவணை அரசினர் வைத்தியசாலை,மகப்பேற்று வைத்தியசாலைகளிலும்,அதனை சூழவுள்ள பகுதிகளிலும் புதன்கிழமை (21.6.2017) மாலை 5.30 மணியளவில் டெங்குநுளம்பை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுச்சுகாதார பரிசோதகர் வீ.வேணிதரன் ,கிராமசேவையாளர் தி.கோகுலராஜ் போன்றோர்கள் முன்னிலையில் புகை விசுறல் இடம்பெற்றது.
துறைநீலாவணையில் டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து துறைநீலாவணை தெற்கு 1 பிரிவில் 120 வீடுகள் பொதுச்சுகாதார பரிசோதகர் வீ.வேணிதரன் தலைமையில் பிரதேச பொதுசுகாதார பரிசோதகர்கள்,கிராமசேவையாளர்கள்,அபிவிருத்தி உத்தியோஸ்தர்கள்,சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள்,போன்ற திடீர் டெங்கு பரிசோதனையின் மூலம்  பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன்போது டெங்குநுளம்பு பரவக்கூடிய டெங்கு சூழலையும்,டெங்குநுளம்பு குடம்பிகளையும் வைத்திருந்த நான்கு(4)பேருக்கு எதிராக எதிர்வரும்( 29.6.2017) வியாழக்கிழமை பொலிசாரினால் வழக்கு பதியப்பட்டும், களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றில் இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் தொடர்ந்தும் துறைநீலாவணையில் டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்று பொதுச்சுகாதார பரிசோதகர் வீ.வேணிதரன் தெரிவித்தார்.