கேபிஎல் சாம்பியன் கிண்ணம் யஸ்டின்லயன்ஸ் அணி வசம்!

கேபிஎல் (K.P.L.) என பிரபலமாக அழைக்கப்படும் கல்முனை பிறிமியர் லீக் இவ்வருடத்திற்கான கிரிக்கட் சாம்பியன் கிண்ணத்தை கல்முனை யஸ்ரின்லயன்ஸ் அணி சுவீகரித்துக்கொண்டது.
நற்பிட்டிமுனை சுப்பர் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் வருடாந்தம் மிகச்சிறப்பாக நடாத்திவரும் அணிக்கு 11பேர் கொண்ட 10ஓவர் இக்கிரிக்கட்சுற்றுத்தொடர் இம்முறையும் கல்முனை உவெஸ்லி விளையாட்டு மைதானத்தில் தலைவர் சி.தினோஜன் தலைமையில்  நடைபெற்றது.
28அணிகள் கலந்துகொண்ட இச்சுற்றுத்தொடரில் இறுதிப்போட்டிக்கு கல்முனை தனுவொறியர்ஸ் அணியும் யஸ்ரின்லயன்ஸ் அணியும் தெரிவாகின.
முதலில் துடுப்பெடுத்தாடிய யஸ்ரின்லயன்ஸ் அணி 10ஓவர்களில் 4விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 92ஓட்டங்களைப்பெற்றது. பதிலக்கு துடுப்பெடுத்தாடிய தனுவொறியர்ஸ் அணி 10ஓவர்களில் சகலவிக்கட்டுகளையும் இழந்து 58ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
ஆறுவிக்கட்டுக்களால் கல்முனை; யஸ்ரின்லயன்ஸ் அணி  வெற்றிபெற்றது.
 வெற்றிக்கிண்ணங்களை கிழக்குமாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் பிரபலசமுகசேவையாளர் சந்திரசேகரம்ராஜன் மாணவர்மீட்ர்பேரவைத்தலைவர் க.கணேஸ் உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டு வழங்கிவைத்தனர்.