வறட்சியால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கிக்கு மக்களுக்கும் நிவாரணம் – பிரதமர்

வடக்கு கிழக்கிலும், ரஜரட்ட பிரதேசத்திலும் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அரசாங்கம் நிவாரணம் வழங்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அரசாங்கம் டெங்கு ஆட்கொல்லியை குறைத்து மதிப்பிடவில்லையென்றும்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதில் அளிக்கையில் . டெங்கு  நோய் பரவுவதைத் தடுப்பதற்கும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய  பிரதமர் , சமீபத்தைய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உரிய நிவாரணங்கள் வழங்கப்படுவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.