கிழக்கு மாகாணத்தில் சிறந்த முதல் வங்கியாக சம்மாந்துறை இலங்கை வங்கி கிளை..

இலங்கையின் முதற்தர வங்கியான இலங்கை வங்கியின் 2016ம் ஆண்டிக்கான வங்கியின் செயற்பாடுகளுக்கான விருது வழங்கல் நிகழ்வு 17.06.2017ம் திகதி கொழும்பு ரத்மலானையில் உள்ள ஸ்ரெயின் ஸ்ரூடியோவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது..

இந்த விழாவில் கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்துக்கான விருதினையும் தேசியரீதியில் ஆறாம்  இடத்தினையும் சம்மாந்துறை இலங்கை வங்கி கிளை தட்டிக் கொண்டது.இதற்கான விருதினை  இலங்கை வங்கியின் கடன் அறவிடற்பிரிவின் பிரதி முகாமையாளர் திரு.W.A.C திஸ்ஸேரா அவர்களிடமிருந்து சம்மாந்துறை இலங்கை வங்கி கிளை முகாமையாளர் திரு.R. தவராசா அவர்கள் பெற்றக் கொண்டார். இன் நிகழ்வில் இலங்கை வங்கியின் கிழக்கு மாகாணத்துக்கான உதவி பொது முகாளையாளர் திரு.D.M.K.S திசாநாயக்க, செயற்ப்பாட்டு முகாளையாளர் திரு.W.M.U அத்தனபொல அம்பாரை மாவட்ட முகாமையாளர் வங்கி உழியர்களும் கலந்து கொண்டனர்