மனித வாழ்வில் நிம்மதியை ஏற்படுத்தும் யோக பயிற்சிகள் தற்காலத்தின் மிகமுக்கியமாக உள்ளது.வைத்திய அத்தியட்சகர் சுகுணன்

தற்காலத்தில் நோய்நொடிகள்களுடனும் பொருளாதார பிரச்சினைகளுடனும்  கூடிய நிம்மதியற்ற வாழக்கையை நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்  அகவேதான் மனித வாழ்வில் நிம்மதியை ஏற்படுத்தும் இந்த யோக பயிற்சிகள் தற்காலத்தின் மிகமுக்கியமாக உள்ளது.  என களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்..

சர்வதேச யோக தினத்தினை முன்னிட்டு விசேட பயிற்சி முகாம்; களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை முன்றலில் நேற்று நடைபெற்றது. பட்டிருப்பு தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் கு.நாகேந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந் நிகழ்வில், பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாகம், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பாடசாலைமாணவர்கள், ஆசிரியர்கள், வாழுங்கலை அமைப்பினர், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், கிரமா கழக உறுப்பினர்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர் இந் நிகழ்வுக்கு தலமைதாங்கி உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடரந்து உரையாற்றுகையில்
   தற்காலத்தில் நாங்கள் விஞ்ஞானத்தின் உச்சக்கட்டத்தில் நின்று கொண்டு விண்வெளிக்கு செய்மதிகளை அனுப்பிக் கொண்டு இருந்தாலும்  அந்த விஞ்ஞானத்தினால் மக்களின் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கான இன்னும் தீர்வுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. நாங்கள் தொலைத்தொடர்புத் துறையில் உச்சத்தில் இருக்கின்றோம். இருந்தபோதும் எமது வாழ்க்கையில் நிம்மதியான தருணங்கள் இருக்கின்றதா? என சிந்தித்து பாரத்தால் இல்லையென்றுதான் கூற வேண்டும். அவ்வாறான தருணங்களை இவற்றினால் வழங்கமுடியாதுள்ளது.
  நாங்கள் தற்காலத்தில் நோய்நோடிகள்களுடனும் பொருளாதார பிரச்சினைகள்களுடனும்  கூடிய வாழக்கையை நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம.; உண்மையில் மூதாதையர்கள் அக்காலத்தில் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் அக்காலத்தில் வாழ்ந்துள்ளனர.; விஞ்ஞான வளர்ச்சியும், அபிவிருத்தியும் அடைந்த தற்காலத்தில் நாங்கள் முழுமையான நின்மதியான பொழுதினைக் கழிக்கின்றோமா?  என்று பாரத்தால் இல்லை.  அதனால்தான் இந்த யோக போன்ற பயிற்சிகள் தற்காலத்தின் தேவையாக உள்ளது. உண்மையில் உள அமைதியுடனும், மன அமைதியுடனும்  எங்களுடைய வாழ்க்கையை நிம்மதியாகவும் கழிப்பதற்கான கலைகளை கற்றுத் தருபபையாகவே  இந்த யோக அமைகின்றது. எனவே நாங்கள் ஒவ்வொருவரும் எங்களது நாட்கள் ஒவ்வொன்றையும் நிம்மதியாக கழிக்கவேண்டுமாக ஒவ்வொருநாளும் தவறாது குறுகிய நோரமாவது இவ்யோக பயிற்சிக்கென ஒதுக்கி மேற்கொள்ள வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.