எதிர்வரும் 1ம் திகதி முதல் பஸ் கட்டணங்கள் திருத்தம்

ஜுலை மாதம் 1ம் திகதி முதல் பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன்படி 6.2 சதவீதத்தால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்ச கட்டணம் 9 ரூபாவிலிருந்து 10 ரூபா வரை அதிகரிப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

12 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் ஜுலை மாதத்தில் பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றது. அடுத்த வருட பஸ் கட்டண திருத்தத்திற்கு முன்னர் இது தொடர்பில் ஒரு தேசிய கொள்கையை வகுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.