டெங்கு நோயினால் 200 பேர் பலி

நாட்டில் மோசமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 200 பேர் உயிரிழந்துள்ளதுடன்  63 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளர்கள் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சகல அரச வைத்தியசாலைகளிலும் 100க்கும் அதிகாமான  நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த மாதத்தில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக நாட்டில் சகல பகுதி
களிலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது.  இந்த ஆண்டில் இதுவரையிலான ஆறுமாத காலத்தில் 63 ஆயிரத்து  987  பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.