சீனியின் விலை ரூபா 96

சந்தையில் சீனியின் விலை அதிகரிப்பதாக பரப்பப்படும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் ஹேமக பெனாண்டோ தெரிவித்தார்.

சந்தையில் சீனியின் விலை நிலையாயனதாக இருப்பதாகவும் 1 கிலோ சீனியின் மொத்தவிலை 96 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.இந்த விலை மேலும் குறைவடையக்கூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் சீனியின் விலை குறைந்து வருகின்றது. உள்ளுர் சீனி உற்பத்தியை பாதுகாக்கும் நோக்கில் சீனி இறக்குமதிக்கான வரி 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை பாராட்டத்ததக்கதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வரி அதிகரிப்பின் காரணமாக சந்தையில் சீனியின் விலை அதிகிரிக்ககூடும் என்று முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களை அவர் முற்றாக நிராகரித்தார்.