விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கு அமைப்பு தயாராக இருக்கின்றது

(பழுகாமம் நிருபர்) மட்டக்களப்பில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு எப்பொழுதும் தயாராக இருக்கின்றது” என அமைப்பின் தவிசாளர் இ.சாணக்கியன் தெரிவித்தார். பெரியபோரதீவு கோல்ட் சிற்றி விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைத்துவிட்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது அமைப்பு விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதிலும், விளையாட்டுக்கழகங்களை வளர்ப்பதிலும் முன்னோடியாக திகழ்கின்றது. விளையாட்டு கழகங்கள் கோருகின்ற உதவிகள் அனைத்தும் புPர்த்தி செய்யப்பட்டுகொண்டு இருக்கின்றது. இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு என்றும் தயாராக இருக்கின்றது. இதுபோன்று படுவான்கரை பிரதேசத்தில் பல கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், மைதான புனநிர்மானம் போன்றவற்றை செய்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.