பாடசாலை கட்டிடம் மீது மரம் விழுந்து சேதம்.

(பழுகாமம் நிருபர்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியபோரதீவு பாரதி வித்தியாலயத்தின் நூலக கட்டிடத்தின் மீது மம் முறிந்து விழுந்ததில் கட்டிடத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பாடசாலை வளாகத்தில் இருந்த பல வருடங்களுக்கு முற்பட்ட இலுப்பை மரம் மற்றும் வேம்பு மரம் ஆகியன அண்மையில் வீசிய பலத்த காற்றினால் முறிந்து விழுந்ததில் கட்டிடங்கள் சேதமாகியுள்ளதாக பாடசாலையின் அதிபர் க.இராஜகுமாரன் தெரிவித்தார்.


பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்திலும் இதற்கு முந்திய காற்றினால் மரம் முறிந்து விழுந்ததில் புதிதாக அமைக்கப்பட்ட மலசலகூட தொகுதி பாதிப்பிற்குள்ளாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.