இருகோணங்களில் செயற்படுகின்றோம்

தமிழரசுக்கட்சியின் செயலாளர் 

வட­மா­காண சபையில் ஏற்­பட்­டுள்ள நெருக்கடி நிலை­மை­களை இரண்டு கோணங்­களில் தொடர்ச்­சி­யாக அணுகிச் செல்­கின்றோம் என்று இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் செய­லா­ளரும் கிழக்கு மாகாண  விவ­சாய அமைச்­ச­ரு­மான கி.துரைரா­ஜ­சிங்கம் தெரி­வித்தார். .

வட­மா­கா­ண­ச­பையில் ஆளும் தரப்­பான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தான கட்­சி­யான இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி உறுப்­பி­னர்கள் மற்றும் ரெலோ உறுப்­பினர் ஒருவர் உள்­ள­டங்­க­லாக முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யொன்று சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் நேற்று முன்­தினம் அவ­ச­ர ­அ­வ­ச­ர­மாக யாழ்ப்­ப­ணத்­திற்கு சென்­றி­ருந்த இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் செய­லாளர் அங்கு தமது கட்­சியின் உறுப்­பி­னர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்..

அவ்­வா­றான நிலையில் தமது கட்சி இவ்­வி­டயம் தொடர்பில் எவ்­வி­த­மான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது என்­பது குறித்து கருத்து வெளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

வட­மா­காண சபையில் தற்­போது நெருக்­க­டி­யான நிலைமை தோன்­றி­யி­ருக்­கின்­றது. குறிப்­பாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் அமைச்­சர்கள் மீதான விசா­ரணைக் குழுவின் அறிக்­கைக்கு ஏற்ப இரண்டு அமைச்­சர்கள் மீது நட­வ­டிக்கை எடுத்­த­மைக்கு மேல­தி­க­மாக ஏனைய இரண்டு அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக கட்­டாய விடு­முறை அறி­விப்பை விடுத்­தி­ருந்தார்.

இதனால் தமி­ழ­ரசுக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் அந்த நடை­மு­றையில் தவ­றுகள் இருக்­கின்­றன என்­பதைச் சுட்­டிக்­காட்டி முத­ல­மைச்சர் மீது தமக்கு நம்­பிக்கை இல்லை என்­பதை குறிப்­பிட்டு ஆளு­ந­ரி­டத்தில் தீர்­மா­ன­மொன்­றினை கைய­ளித்­துள்­ளனர்.

இதில் தவ­றான புரி­த­லொன்று வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி உறுப்­பி­னர்கள் வடக்கு மாகா­ணத்தில் எதிர்­கட்­சி­யா­க­வுள்ள தென்­னி­லங்கை பெரும்­பான்மை கட்­சி­யான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யுடன் இணைந்து முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லா ­பி­ரே­ர­ணையை சமர்ப்­பித்­த­தாக பொய்­யான பிர­சாரம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

உண்­மை­யி­லேயே இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் உறுப்­பி­னர்கள் 15 பேரும், ரெலோவின் உறுப்­பினர் ஒரு­வ­ரு­மாக 16பேர்

முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை சமர்ப்­பித்­துள்ள அதே­நேரம் அதற்கு மேல­தி­க­மாக எதிர்க்­கட்­சியைச் சேர்ந்த 5 உறுப்­பி­னர்கள் நம்­பிக்­கை­யில்­லாப்­பி­ரேைணை சமர்ப்­பித்­துள்­ளார்கள். இதுவே உண்­மை­யான நிலை­மை­யாகும்.

அவ்­வா­றி­ருக்­கையில் வடக்கு முத­ல­மைச்சர் தேர்தல் வெற்­றியின் பின்னர் கட்­சியின் கொள்­கை­க­ளுக்கு முர­ணான வகையில் செயற்­பட்டு வந்தார். அச்­சந்­தர்ப்­பங்­களின் போதெல்லாம் கட்சி உறுப்­பி­னர்கள் அதனை சுட்­டிக்­காட்­டி­ய­போது நாம் அவர்­களை அமை­திப்­ப­டுத்­தினோம். மக்­களின் நலன்­களை மையப்­ப­டுத்­தியும் எமது கூட்­டுப்­பொ­றுப்­பினை முன்­னெ­டுக்கும் வகை­யிலும் அமை­தி­யாக செயற்­பட்­டி­ருந்தோம்.

அவ்­வா­றான நிலையில் அவர் தற்­போது தான் எந்­தக்­கட்­சியும் சாரா­தவர் என்று கூறு­கின்றார். தன்­னு­டைய கௌர­வத்­திற்­காக அனைத்து விட­யங்­க­ளையும் ஒதுக்கி வைத்­து­விட்டு அர­சியல் ஒழுக்க நெறி­க­ளற்ற வகையில் செயற்­ப­டு­கின்­றமை வேத­னைக்­கு­ரி­ய­தாகும்.

குறிப்­பாக அவர் கட்­சியின் மத்­திய குழுக்­கூட்­டங்­களில் பங்­கேற்­காது இருந்தார். ஒருங்­கி­ணைப்பு குழு கூட்­டங்­களில் பங்­கேற்­காது இருந்தார். பாரா­ளு­மன்ற, மாகாண சபை உறுப்­பி­னர்கள் குழு கூட்­டங்­க­ளையும் தவிர்த்து வந்தார். இதனால் கட்­சியின் உறுப்­பி­னர்கள் என்ன மன­நி­லையில் இருக்­கின்­றார்கள். எவ்­வா­றான நிலை­மைகள் கட்­சிக்குள் இருக்­கின்­றன என்­ப­தை­யெல்லாம் அவர் அறி­யாது தன்னைத் தானே தனி­மைப்­ப­டுத்தி வேறொரு பாதையில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்தார்.

அத்­த­கைய நிலை­மையில் தான் வட­மா­காண அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­தன. அதுவும் வட­ம­ாக­ாண சபையின் உறுப்­பி­னர்­க­ளா­லேயே அதி­க­ள­வி­லான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நான்கு கட்­சி­களைக் கொண்ட கட்­ட­மைப்பு. ஆகவே பல்­வேறு கருத்­துக்கள் காணப்­படும்.

எனவே அவ்­வாறு குற்­றச்­சாட்­டுக்கள் கிடைக்­கின்­ற­போது கட்­சித்­த­லை­மை­க­ளுடன் அவர் கலந்து பேசி­யி­ருக்­க­வேண்டும். அதனை விடுத்து தானே விசா­ர­ணைக்கு­ழுவை அமைத்தார். அந்த விசா­ர­ணைக்­குழு அறிக்­கையை சமர்ப்­பித்­தது. அதில் ஒரு அமைச்சர் மீதே ஊழல் குற்­றச்­சாட்டு காணப்­பட்­டது. மற்றைய அமைச்சர் மீது நிர்­வாக சீர்­கேடு தொடர்­பான குற்­றச்­சாட்டே காணப்­பட்­டது. ஏனைய இரண்டு அமைச்­சர்கள் மீது எவ்­வி­த­மான குற்­றச்­சாட்­டுக்­களும் காணப்­ப­ட­வில்லை.

இவ்­வி­த­மான நிலையில் கூட்­ட­மைப்பின் சிரேஷ்ட தலைவர் இருக்­கின்றார். கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் கட்­சியின் தலை­வர்கள் இருக்­கின்­றார்கள். அவர்­க­ளி­டத்தில் எவ்­வி­த­மான நேர­டிக்­க­லந்­து­ரை­யா­டல்­க­ளையும் செய்­வதை தவிர்த்­தி­ருந்தார்.

தொலை­பேசி வழி­யாக ஒரு­சி­ல­ருடன் கலந்­து­ரை­யா­டி­ய­போதும் ஏனை­ய­வர்­க­ளுடன் அவர் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கி­வில்லை. இத்­த­கைய நிலை­மை­யிலும் எமது சிரேஷ்ட தலைவர் சம்­பந்தன் அவ­ருடன் உரை­யா­டினார்.

எனினும் அந்த விட­யங்­களை எல்லாம் தவிர்த்து அவர் தனது சுய­தீனத்தின் அடிப்­ப­டையில் கடந்த 14 ஆம் திகதி அறி­விப்பை மாகாண சபையில் விடுத்தார். இதில் ஊழல் மோசடி செய்­தவர், நிர்­வாகச் சீர்­கேடு குற்றம் சாட்­டப்­பட்­டவர் ஆகிய இரு­வ­ருக்கும் ஒரே வித­மான தீர்ப்­பையே வழங்­கினார். அதற்கு அப்பால் ஏனைய அமைச்­சர்கள் இரு­வ­ருக்கும் கட்­டாய விடுப்­பையும் வழங்­கினார்.

இதனால் தமி­ழ­ர­சுக்­கட்சி உறுப்­பி­னர்­களும், ரெலோவின் உறுப்­பினர் ஒரு­வ­ரு­மாக இணைந்து முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லை என்று கட்­சித்­த­லை­மை­யு­ட­னான கூட்­டத்தில் தெரி­வித்து அத்­தீர்­மா­னத்­தினை ஆளு­ந­ரி­டத்தில் கைளித்­தனர்.

இவ்­வா­றான நிலையில் நான் நேர­டி­யாக யாழ்ப்­பா­ணத்­திற்கு சென்று உறுப்­பி­னர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டினேன். அவர்­க­ளுக்கு ஜன­நா­யக உரி­மைகள் காணப்­ப­டு­கின்­றன. மாகாண சபை பிர­தி­நி­திகள் என்ற அடிப்­ப­டையில் அவர்­க­ளுக்கு சிறப்­பு­ரி­மைகள் காணப்­ப­டு­கின்­றன.

அத­ன­டிப்­ப­டையில் தான் அவர்கள் அத்­த­கைய தீர்­மா­னத்­திற்கு வந்­தி­ருந்­தார்கள். அதற்கு நாங்கள் தடை­யாக இருக்­க­மு­டி­யாது. அவர்­களை ஆசு­வா­சப்­ப­டுத்தும் வகையில் முத­ல­மைச்­சரின் செயற்­பா­டு­களும் காணப்­ப­ட­வில்லை. எனவே உறுப்­பி­னர்கள் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் குறிப்­பிடும் விட­யங்­களை என்­னி­டத்­திலும் குறிப்­பிட்டு அதனை தயா­ரிக்கும் செயற்­பா­டு­களை ஆரம்­பித்­தி­ருந்­தார்கள். அத்­துடன் சத்­தி­யக்­க­ட­தா­சி­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­க­ளையும் எடுத்து வரு­கின்­றனர்.

இது ஒருபுறம் நடந்­து­கொண்­டி­ருக்­கையில் எப்­போதும் பொறு­மை­யா­கவும், நிதா­ன­மா­கவும், விட­யங்­களை கையா­ள­வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருக்கும் எமது சிரேஷ்ட தலைவர் சம்­பந்தன், முத­ல­மைச்சர் மற்றும் ஏனை­ய­வர்­க­ளுடன் இவ்­வி­ட­யங்­களை சுமு­க­மாக தீர்த்­துக்­கொள்­வ­தற்­கான கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்றார். இவ்­வி­த­மான இரண்டு கோணங்­களில் எமது கட்சி செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது.

virakesari