கொக்கட்டிச்சோலையில் படுவான் சமர் ஆரம்பம் – season 8

(படுவான் பாலகன்)   கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகம் நடாத்தும் படுவான்சமர் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று(17) சனிக்கிழமை ஆரம்பமாகியது.
இப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச்சேர்ந்த பல விளையாட்டுக் கழகங்களும் பங்குபற்றி இருக்கின்றன.
சனி, ஞாயிறு ஆகிய இருதினங்களும் சுற்றுப்போட்டிகள் நடைபெற்று இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை பி.ப.03.30மணிக்கு  கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 


இப்போட்டிகளில் வெற்றிபெறும் அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களும், சிறந்த விளையாட்டு வீரர்கள், பந்து காப்பாளர்கள் போன்றோருக்கு நினைவு கிண்ணங்களும் வழங்கப்படவுள்ளன.