மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு 2017 ஆரம்பம்

போரும் போருக்குப் பின்னருமான காலத்தில் தொட்டுணரா அல்லது அருவப் பண்பாட்டு மரபுகள் எதிர்கொள்ளும் சவால்களும் முக்கியத்துவமும் என்ற தொனிப் பொருளில் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நேற்று  வியாழக்கிழமை 15ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சிவஞானம் ஜெய்சங்கர் தலைமையில் ஆரம்பமான இந் நிகழ்வு மூன்று நாட்கள் கொண்டதாக, ஜுன் 15ஆம் 16ஆம் 17ஆம்  திகதிகளில் நடைபெறுகின்றது..

 

இம் மாநாட்டின் இறுதி நாளான 18 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திற்கான கலாசார மற்றும் தேடல் யாத்திரையுடன் நிறைவு பெறுகின்றது.

 

இம் மாநாட்டின் ஆரம்ப நாள் நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரி.ஜெயசிங்கம்பெராசிரியர் எஸ்.மௌனகுரு, கலை கலாசார பீட பீடாதிபதி கே.ராஜேந்திரம், கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் என்.செல்வக்குமரன், பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு உள்ளிட்ட பலர் சலந்து சிறப்பித்தனர்.

சிரேஸ்ட விரிவுரையாளர்களான கலாநிதி ஜே.ஞானதாஸின் திறப்புரையை அடுத்து கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் என்.செல்வக்குமரன் சிறப்புரையாற்றினார்.

 

போர்க் காலத்திலும் போருக்குப் பின்னரான காலத்திலும் மனித வாழ்வை வடிவமைக்கின்ற பண்பாட்டு மரபுரிமைகள் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன, முக்கியமான பங்கையும் ஆற்றிவருகின்றன.

போரனர்த்த அழுத்தங்களில் இருந்து விடுவிப்பு, இடம்பெயர்வு மற்றும் மீள்குடியேற்ற வேளைகளில் ஒன்றிணைத்தல், சமுதாயமயப்படுத்தல், வாழ்க்கையை மீளத்தொடங்குவதற்கு ஆற்றுப்படுத்தல், ஆற்றல்களைக் கொண்டாடுதல், உள்ளூர் அறிவு, திறன் என்பவை வாழ்க்கையை மீளவும் உருவாக்குவதற்கான மூலாதாரங்களாக விளங்குதல் எனப் பேசாப் பொருளாகவே இவை இயங்கி வருகின்றன.

எனவே உணர்ந்தும் உணராமலும், அறிந்தும் அறியாமலும் வாழ்வியலை வடிவமைத்துக் கொண்டிருக்கின்ற, பேசாப் பொருளாகவே அதிகம் காணப்படுகின்ற தொட்டுணராப் பண்பாட்டு மரபுரிமைகள் மீதான கவனத்தைக் கோரும் வகையிலும், அவற்றில் இக்காலத் தேவையை அறியவும் உணரவும் கூடிய வகையிலும் உலக ஆராய்ச்சி மாநாடு 2017 திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

இவ் ஆராய்ச்சி மாநாடு, முன்னெடுக்கப்பட்டுவரும் ஆராய்ச்சி செயற்பாடுகளின் மதிப்பீடுகளுக்கான சந்திப்பாகவும், புதிய சிந்தனைகள், புதிய தொடர்புகளுடன் தொடர்ந்த முன்னெடுப்புகளுக்கான உந்து புள்ளியாகவும் அமைகின்றது.

இந்தவகையில் பண்பாட்டு மரபுரிமைகள் பற்றிய உரையாடலில் மிகப் பெரும்பாலும் தொட்டுணரக் கூடியவை பற்றி பேசப்படுவதே அதிகமாதாகவும், அதிகாரபூர்வமானதாகவும் இருந்து வருகின்றது. சிற்பம், ஓவியம், கட்டடம், இடம் என்பவை முக்கியத்துவம் பெறுகின்றன.

இவ் ஆரம்ப நிகழ்வின்போது பேருரைகளுடன் கலை நிகழ்வுகளும், ஆராய்ச்சிகளுக்குடான ஆற்றுகைகள், காட்சிப்படுத்தல்கள் வடிவமைக்கப்பட்டிருந்தமை ஓர் சிறப்பம்சமாகும்.

பண்பாட்டு மரபுரிமைகள் பற்றிய உரையாடலில் மிகப் பெரும்பாலும் தொட்டுணரக்கூடியவைகளாக இருக்கின்ற சிற்பம் ஓவியம் கட்டடம் இடம் என்பன முக்கியத்துவம் பெறுகின்ற அதேவேளையில் சடங்குகள் கொண்டாட்டங்கள் ஆற்றுகைகள் உள்ளிட்ட சமூகப் பண்பாட்டுப் புளக்கங்கள் மற்றும் வாழ்வியல் செயற்பாடுகள் என்பன வாழ்வை வடிவமைப்பதில் அதிக செல்வாக்கினைக் கொண்டிருப்பினும் அதிக கவனத்தைப் பெறுவதாக இல்லை.

நாட்டுப்புற வழக்காற்றுக் கற்கைகளில் இவை கவனத்தில் கொள்ளப்படினும் ஈழச் சூழலில் மேற்படிக் கற்கைகள் இன்னமும் அவற்றின் முக்கியத்துவத்தைப் பெற்றதாக இல்லை.

இந்நிலையில் போர்க் காலத்திலும் போருக்குப் பின்னரான காலத்திலும் மனித வாழ்வை வடிவமைக்கின்ற பண்பாட்டு மரபுரிமைகள் சவால்களை எதிர்கொண்டு வருவதுடன் முக்கியமான பங்கினையும் ஆற்றி வருகின்றன.

போரனர்த்த அழுத்தங்களில் இருந்து விடுவிப்பு இடம்பெயர்வு மற்றும் மீள்குடியேற்ற வேளைகளில் ஒன்றிணைத்தல் சமுதாய மயப்படுத்தல் வாழக்கையை மீளத்தொடங்குவதற்கு ஆற்றுப்படுத்தல் ஆற்றல்களைக் கொண்டாடுதல் உள்;ளுர்அறிவு திறன் என்பவை வாழ்க்கையை மீளவும் உருவாக்குவதற்கான மூலாதாரங்களாக விளங்கினாலும் இவை பேசாப் பொருளாகவே இயங்கி வருகின்றன.

எனவே உணர்ந்தும் உணராமலும் அறிந்தும் அறியாமலும் வாழ்வியலை வடிவமைத்துக்கொண்டிருக்கின்றவற்றில் பேசாப் பொருளாகவே அதிகம் காணப்படுகின்ற தொட்டுணராப் பண்பாட்டு மரபுரிமைகள் மீதான கவனத்தைக் கோரும் வகையிலும் அவற்றில் இக்காலத் தேவையை அறியவும் உணரவும் கூடிய வகையிலும் உலக ஆராய்ச்சி மாநாடு 2017 திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

இம்மாதம் 15ம் திகதி மாலை 06.30 மணிக்கு தொடக்க விழாவுடன் ஆரம்பமாகும் இம் மாநாட்டில்  120 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளதுடன் 17ம் திகதி மாலை பறங்கியர் கலைவிழாவும் 18ம் திகதி கலைப்பண்பாட்டுக் களப்பயணமும் இடம்பெறஉள்ளன.