ஒருசிலருக்கு தொழில் வழங்க வேண்டும் என்பதற்காக எதிர் கால சந்ததியை அழிக்க முடியாது

தொழில் வழங்குகிறோம்  என்று கூறி இந்தப்பிரதேசத்தின் வளங்களை கொள்ளையடிப்பதனை  உடன் நிறுத்துங்கள். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் குமாரசுவாமி நாகேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று  முதுார்  பிரதேச செயலகபிரிவில் உள்ள இரால்குழி கிராமத்தில் நடந்த மண்கழ்வு மற்றும் கங்கையரிப்பை தடுத்தல் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தின் பின்னர்  நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோதே மேற்படி விடயத்தை அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்துபேசுகையில்,,

இரால்குழி கங்கை கிராமத்தை பெரிதாக அரித்த வண்ணமுள்ளன. நான் அறிந்த வகையில் ஏறக்குறைய 14பேரின் காணிகள் கங்கையில் அள்ளுண்டு போயுள்ளன.

இதற்கு நிரந்தரமான தீர்வாக தடுப்புச்சுவர் ஒன்று அவசியமாகும் இந்த விடயத்தை பல மட்டங்களிலும் நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம்.

அதற்கு மிகவும் அதிகளவிலான நிதி தேவைப்படும் என்ற காரணத்தினால் இந்த தடுப்புசவர் திட்டம் கால தாமதமாகிக்கொண்டு போகின்றது.

கங்கையில் அள்ளுண்டு சென்ற காணி உரிமையாளர்கள் , தற்சமயம் மாற்றுக்காணிகளை தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலமையை தடுக்காமல் விட்டால் இக்கிராமத்தின் அனேக குடும்பங்கள் மாற்றுக்காணியை தேடவேண்டிய நிலமை ஏற்படும்.

ஆகவே இரால்குழி பாலத்தில் இருந்து கடல் வரையான பகுதிகளில் கற்சுவரை அமைக்க அனைவரும் பரிந்துரை செய்ய வேண்டும். அதற்கான பரிந்துரை செய்யப்படவேண்டியுள்ளன.

இன்று இந்த  சுற்று சூழல் பாதுகாப்பு நிகழ்வு மிகவும் அவசியமான இடத்தில்  அவசியமான சூழலில் நடைபெறுகிறது. இதற்கான பலாபலன் விரைவில் மக்களுக்க கிட்டவேண்டும்

இந்த விடயத்தில் அனைத்து தரப்பினரும் உதவ முன்வரவேண்டும் எதிர் கட்சி மாற்றுக்கட்சி என்று பார்க்காமல், அனைவரும் இவ்வளி ப்பை தடுக்க முன்வரவேண்டும்

இந்தகிராமம் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டும் இது  இந்தபிரதேசத்திற்கு மிகவும் முக்கியமான விடயமாகவுள்ளன.

இப்பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற மண்ணகழ்விற்கெதிராக இந்தகிராம மக்கள் பல்வேறுபோராட்டங்களை முன்னரும் நடாத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக பல்வேறு அரச உயர் மட்டங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சூற்றுப்புறச்சூழல் தொடர்பான  பாதுகாப்பு விடயத்தில்  உள்ள அக்கறை மக்களுக்கு மட்டுமல்ல, அதிகாரிகளுக்கு மட்டுமல்ல குறிப்பாக அரசியல் வாதிகளுக்கு வரவேண்டும்

ஒப்பந்தக்காரர்களுக்கு  அரசியல் வாதிகள் வழங்குகின்ற தலையீடுகளை தடுத்து நிறுத்தவேண்டும். எனவே தொடர்ச்சியாக மண்ணகழ்வது நிறுத்தப்பட வேண்டும்என்பது மக்களின் நியாயமான கோரிக்கையாகும்.

இந்த பிரதேச மக்களின் மற்றும் பிள்ளைகளின் எதிர் காலம் கருதி  அதனை உணர்ந்து இங்குள்ள அரச அதிகாரிகள் தங்களது கடமைகளை சரிவரச்செய்ய வேண்டும். ஒருசிலருக்கு தொழில் வழங்க வேண்டும் என்பதற்காக எதிர் கால சந்ததியை அழிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.