முதன்முறையாக வழங்கப்பட்ட சாரணர் விருது.

(பழுகாமம் நிருபர்) பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திக்கோடை கணேஷ வித்தியாலயத்தின் பெண்கள் சாரணிய மாணவர்களுக்கு, மாவட்ட சாரணர் ஆணையாளர் விருது அண்மையில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இப்பாடசாலையில் 2013ம் ஆண்டு சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பொறுப்பாசிரியர்களாக திருமதி ச.புட்கரன் மற்றும் செல்வி இந்துஜா கனகசூரியம் ஆகியோர் முன்னின்று செயற்பட்டனர்.
இவ்விருதினை மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக இப்பாடசாலையே பெற்றுக்கொண்டுள்ளதாக மாவட்ட உதவி சாரணர் ஆணையாளர் ஆ.புட்கரன் தெரிவித்தார்.