அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று(15) வியாழக்கிழமை  இடம்பெற்றது.
வித்தியாலய பதில் அதிபர் செ.சிவநடேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வகுப்புக்களில் முதல்நிலை, பாடங்களில் அதிகபெறுபேறு, தொடர்ச்சியான வரவு, தரம் 5புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள், கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்தவர்கள், பல்கலைக்கழகம், கல்வியற்கல்லூரி போன்றவற்றிற்கு தெரிவானர்கள், இணைப்பாட விதாண செயற்பாடுகளில் திறமைகளை வெளிக்காட்டியவர்களென பல மாணவர்களுக்கு இதன்போது பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராசா கல்வி உயரதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.