பிரதேசசபை, மாகாணசபை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை

(படுவான் பாலகன்) அரசியலுக்காக உதவிகளை வழங்கவில்லை, தமிழ் மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதற்காகவே உதவிகளை வழங்கி வருகின்றோம். பிரதேசசபைத் தேர்தலிலோ, கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலோ போட்டியிடப்போவதுமில்லை.  என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இ.சாணக்கியன் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட அதிபர்களுக்கு புதன்கிழமை(14) காரியாலய பை வழங்கி வைக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார்.

அரசியலில் செல்வாக்கு பெறுவதற்காக இவ்வாறான உதவிகளை வழங்கி வருகின்றோம் என சிலர் விமர்சிக்கலாம். அந்த நோக்கத்திற்காக இவ்வாறான உதவிகளை நாம் வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கல்வியினை உயர்த்த வேண்டும் என்பதற்காகவே இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினை உருவாக்கி அதன்மூலமாக மாணவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றோம். அத்தோடு வாழ்வாதார உதவிகளையும் வழங்கி வருகின்றோம். வரவிருக்கின்ற பிரதேசசபைத் தேர்தலிலோ, கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலோ போட்டியிடப்போவதுமில்லை. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கல்விக்காக எவ்வாறான உதவிகளை வழங்கமுடியுமோ அவ்வாhறன உதவிகளை வழங்குவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம் என்றார்.

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் குறித்த தினத்தில் முனைக்காடு பாலர் பாடாசாலைக்கு மின்னிணைப்பும், முனைக்காடு சாரதா வித்தியாலய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளும், நாற்பதுவட்டையில் விசேடமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மேலதிக வகுப்பில் கற்பிக்கின்ற மூன்று ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவும், அதிபர்களுக்கு காரியாலய பையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.