தமிழ் மக்களைப் பார்த்து இன்னும் இன்னும் ஏளனமாக சிரிக்கும் நிலையை இவர்கள் தமிழர்களுக்கு தந்து விட்டார்கள்.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு சந்தோஷம்!

அந்த இரண்டு பேரும் விட்ட தவறுகளால் வடக்கு மாகாணம் சந்தியில் நிற்கின்றது.

ஒருவர் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா

மற்றையவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் ஐயா.

வடக்கு மாகாண சபை அமைக்கப்பட்ட போது பலரின் எதிர்ப்பையும் மீறி தலைவர் சம்பந்தன் ஐயா விக்னேஸ்வரன் ஐயாவை முதலமைச்சராக நியமித்தார்.

முதலமைச்சர் பதவி ஏற்றவுடனேயே அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெட்டியோடி காரியங்களை பார்க்க ஆரம்பித்தார். தமிழர்களின் ஏக தலைவராக அவர் தன்னைத் தானே மகுடம் சூட்டினார். பலர் இவருக்கு பின்னால் இருந்து அவரை உசுப்பி விட்டு கூத்துப் பார்த்தனர். இதில் புலம் தமிழர்களின் அமைப்புகள் சிலவும் காரியம் சாதிக்கப்பார்த்தனர்.

தலைமைக்கு கட்டுப்படாமல் தான் தோன்றித் தனமாக முடிவுகளை அவர் எடுத்தார்.

முதலமைச்சர் தமிழரசுக் கட்சியை ஓரங்கட்டப் பார்த்தார்!

விளைவு தமிழரசுக்கட்சி முதல்வரை ஓரங்கட்டி விட்டது.

வடக்கு மாகாண சபையில் பல்வேறு பிரச்சினைகள் வந்த போது அது தொடர்பாக பல முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரோ முதலமைச்சர் பார்த்துக் கொள்வார், நடவடிக்கைகள் எடுகஎகாமல் இருந்து விட்டார். வடக்கு மாகாண சபையில் எடுக்கப்பட்ட பல விடயங்கள் பலவற்றின் மீது அவர் நடவடிக்கை எடுக்க வில்லை.

இதன் காரணமாக இருவர் விட்ட தவறுகளாலும், இன்று வடக்கு மாகாண சபை நடுத்தெருவுக்கு வந்து நிற்கின்றது.

தமிழ் மக்களைப் பார்த்து இன்னும் இன்னும் சிங்களவர்கள், வெளிச்சக்திகள் ஏளனமாக சிரிக்கும் நிலையை இவர்கள் தமிழர்களுக்கு தந்து விட்டார்கள்.

இனி எல்லாம் முடிந்து விட்டது.

வடக்கு மாகாண சபை என்பது பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்த்தியாகங்களால் கட்டி எழுப்பப்பட்டது.

ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன்