வீதி விபத்துக்கள் 1161, ரயில்களில் மோதி 20பேர் மரணம்

ஜனவரி முதல் மே மாதம் வரை 1104 வீதி விபத்துக்கள்

கடந்த ஜனவரி மாதம் 1ம் திகதி முதல் மே மாதம் 31ம் திகதி வரை 1104 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இதனால் 1161 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்புதொடர்பான தேசிய பேரவை அறிவித்துள்ளது.
இதில் 349 பேர் பாதசாரிகளாவர். இதில் 441பேர் சைக்கிள் உரிமையாளர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் , மேல் மாகாணத்தில் கூடுதலான வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ரயில்களில் மோதி 20பேர் 

கைத்தொலைபேசி பாவனையினால் ரயில்களில் மோதி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வருடத்தில் 20 இளைஞர், யுவதிகள் இவ்வாறான விபத்துக்களினால் உயிரிழநதுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கரையோர ரயில் பாதையிலேயே அதிகளவானோர் விபத்துக்குள்ளாகி இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.