இடைநிறுத்தப்பட்ட போட்டிப்பரீட்சைகளின் திகதிகள் வெளியாயின

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பரீட்சைகள் மீண்டும் நடத்தப்படுமென்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

இதற்கமைவாக, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் உதவி சாரதி ஆலோசகர்களைப் பதிவு செய்வதற்கான எழுத்துமூலப் பரீட்சை எதிர்வரும் ஜுலை மாதம் 9ம் திகதி இடம்பெறவுள்ளது.

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் தரம் 3ற்கு ஆட்களை இணைத்துக் கொள்வதற்கான பகிரங்க போட்டிப் பரீட்சை ஜுலை மாதம் 22ம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்தப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 952 ஆகும்.

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் 3ற்கு ஆட்களை இணைத்துக் கொள்வதற்கான வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சை ஜுலை மாதம் 23ம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தப் பரீட்சைகளுக்கான புதிய பரீட்சை அனுமதி அட்டை அனுப்பி வைக்கப்படுமென்று பரீட்சைகள் ஆணையாளர் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விபரங்களை அறிந்து கொள்வதற்கு, பின்வரும் தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்

0112-785-230, 0112-177-075 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும் 1911 என்ற உடனடித் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.