பாட­சா­லை­க­ளுக்கு விஷ இர­சா­யன காகி­தத்தால் அச்­சி­டப்­பட்ட புத்­த­கங்கள் விநி­யோகம்

பாட­சா­லை­களில் தரம் ஏழு மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் புவி­யியல் புத்­தகம் விஷ இர­சா­ய­னத்­தி­னாலான காகி­தத்தால் அச்­சி­டப்­பட்­டுள்­ளது. இது மாண­வர்­களின் ஆரோக்­கி­யத்­திற்கு கேடு விளை­விக்கக் கூடி­யது எனவும் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் குற்றம் சுமத்­தி­யது.

அத்­துடன் தற்­போது மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டி­ருக்கும் 2 இலட்­சத்­திற்கும் அதி­க­மான குறித்த புவி­யியல் புத்­த­கங்­களை மீளப்­பெ­று­வ­தற்கு ஜனா­தி­பதி விரை­வான நட­வ­டிக்­கையை மேற்­கொள்ள வேண்டும் எனவும் அச்­சங்­கத்தின் பிரதிச் செய­லாளர் வைத்­தியர் ஹரித்த அளுத்கே தெரி­வித்தார்.

தொழில்சார் நிபு­ணர்­களின் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

பாட­சா­லை­களில் தரம் ஏழு மாண­வர்­க­ளுக்­காக தற்­போது வழங்­கப்­பட்­டி­ருக்கும் புவி­யியல் புத்­த­கங்கள் விஷ இர­சா­ய­னத்­தினாலான காகி­தத்தால் அச்­சி­டப்­பட்­டுள்­ளது. குறித்த காகி­கத்தால் அச்­சி­டப்­பட்­டுள்­ள­மையால் மாண­வர்­களின்  ஆரோக்­கி­யத்தில் பாரிய பாதிப்­பினை ஏற்­ப­டுத்தும்.

குறித்த விஷ இர­சா­ய­னத்­தி­னா­லான காகி­­தத்தால் அச்­சி­டப்­பட்ட 5 இலட்சம் புத்­த­கங்­க­ளுக்கு அர­சாங்­கத்­தினால் 15 கோடி ரூபா நிதி செல­வி­டப்­பட்­டுள்­ளது. இதற்­கான அமைச்­ச­ரவை பத்­திரம் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்­டோபர் மாதம் 12 ஆம் திகதி சபையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.

குறித்த திட்­டத்­தினை பரி­சோ­தித்து தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய திட்­ட­மிடல் திணைக்­களம் ஆய்வு முடி­வொன்றை வெளி­யிட்­டது. அதில் குறித்த இர­சா­ய­னத்­தினா­லான காகித புத்­த­கத்­தினால் சுற்­றாடல் பாதிப்பு, மாண­வர்­களின் ஆரோக்­கி­யத்தில் சீர்­கேடு மற்றும் தொழி­நுட்ப பிரச்­சி­னைகள் ஏற்­படும் என அவ்­வ­றிக்­கையில் குறிப்­பிட்­டி­ருந்­தது.

எனினும் அவ்­வ­றிக்­கை­யினை கல்வி அதி­காரி அமைச்­ச­ரவை பத்­தி­ரி­கை­யுடன் சமர்ப்­பித்­தி­ருக்­க­வில்லை. அத்­துடன் அச்­சி­டப்­பட்ட 5 இலட்சம் புத்­த­கங்­களில் தற்­போது 2 இலட்­சத்­திற்கும் அதி­க­மா­னவை நாட­ளா­விய ரீதியில் இயங்கும் பாட­சா­லை­களின் தரம் 7 இல் கல்வி பயிலும் மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

குறித்த புத்­த­கத்தின் காகி­தத்தில் அசற்­றோ­பினோன்,பென்­ச­லி­டி­கயிட்,பென்­சயில் அற்­ககோல், பென்­சோ­பினோன் போன்ற இர­சா­ய­னங்கள் சேர்க்­கப்­பட்­டுள்­ளன. அதனால் மாண­வர்­களின் கண்­பார்­வைக்கு தீங்­கேற்­ப­டுத்­து­வ­துடன் உடல் நல ஆரோக்­கி­யத்­துக்கு கேடும் விளை­விக்கும். அத்­துடன் குறித்த காகிதத்தால் சுற்­றாடல் பாதிப்பும் ஏற்­படும்.

ஆகவே, சிறந்த கல்­வியை மாண­வர்­க­ளுக்கு வழங்க வேண்­டிய தரு­ணத்தில் இவ்­வா­றான அர­சாங்­கத்தின் முறை­யற்ற கொள்­கைத்­திட்­டத்தால் பாரிய பாதிப்­புக்­களை எதிர்­கா­லத்தில் எதிர்­நோக்க வேண்­டி­யேற்­படும். இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் மூலம் அறிவித்திருக்கின்றோம். ஜனாதிபதி நாட்டின் அபிவிருத்தியை கருத்திற்கொண்டு விநியோகிக்கப்பட்டிருக்கும் புத்தகங்களை மாணவர்களிடம் இருந்து மீளப்பெறு வதற்கான நடவடிக்கையினை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் இது குறித்த விசாரணைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

virakesari