கதி கலங்கி போனது வடக்கு : வெளியேறினர் மாகாணசபை உறுப்பினர்கள்

0
848

வட மாகாண அமைச்சர்களான ரி. குருகுலராசா மற்றும் பொன். ஐங்கரநேசன் ஆகியோரை தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து சுயமாக விலக வேண்டும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சற்று முன்னர் தெரிவித்தார்.

இதேவேளை, மேலும் இரு அமைச்சர்களான பா.டெனீஸ்வரன் மற்றும் பி. சத்தியலிங்கம் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க புதிய விசாரணக்குழு அமைக்கப்படும் எனவும் இந்த விசாரணைகள் முடிவுறும் வரை குறித்த இருவரும் விடுமுறையில் இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் சபையில் குறிப்பிட்டார்.

 

வடமாகாண சபை உறுப்பினர்கள் வெளிநடப்பு

வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வியமைச்சர் த.குருகுலராசா ஆகிய இருவர் மீதும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மீதான விவாதம்,  வடமாகாண சபையின் விசேட அமர்வாக, இன்றுப் புதன்கிழமை (14) இடம்பெற்று வருகின்றது.

இதன்போது, வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.