தம்பி இல்லாத உலகத்தில் நான் வாழமாட்டேன் எனக்கூறிய அண்ணனும் சாவை தழுவிக் கொண்டார்.

தம்பி இல்லாத உலகத்தில் நான் வாழமாட்டேன் எனக்கூறிய அண்ணன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு வாகரைப்பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மரணமடைந்தவர் வாகரை 5ம் வட்டாரத்தைச்சேர்ந்த மோகனதரன் வயது 28

என திடீர் மரண விசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் தெரிவித்தார்.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது 08/06/2017 ம் திகதி இரவு தனது தம்பி (23 வயது )மாரடைப்பால் மரணமானதை அறிந்து உடனே தம்பி இல்லாத உலகத்தில் நான் வாழ மாட்டேன் எனக் கூறிக் கொண்டு கயிற்றை எடுத்துக் கொண்டு ஓடியவர்  அயலில் உள்ள நாவல் மரத்தில் தூக்கில்தொங்கிய நிலை யில் மீட்கப்பட்டு வாகரை மற்றும் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு மாற்றி பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 12/06/2017 மரணமானார்.

பிரேதப் பரிசோதனை B.k.p.I றொற்றிகோ அவர்கள் மேற்கொண்டார். தனக்கு தானே கழுத்தில் சுருக்கிட்டுத் தூக்கில் தொங்கிய காரணத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு மூளை செயலிழந்தமையினால் சம்பவித்த தற்கொலை மரணம் என திடீர் மரண விசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மரணமானவரின் இரு சகோதரிகள் பாம்பு கடிக்கு முன்பு மரணமானார்கள் என்பது குறிப்பிட்ட தக்கது.