சீனி – சில்லறை விலை அதிகரிக்க மாட்டாது

சீனிக்கான இறக்குமதி வரி 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டாலும், அதற்கேற்றவாறு சந்தையில் சீனியின் விலை அதிகரிக்க மாட்டாது.
இதனை சீனி இறக்குமதியாளர் சங்கம் நுகர்வோர் சேவைகள் அதிகார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
இதன் பிரகாரம் சந்தையில் சீனியின் சில்லறை விலை அதிகரிக்க வாய்ப்பில்லை என நிதியமைச்சு அறிவித்துள்ளது.
எவரேனும் போலியாக சீனியின் விலையை அதிகரிக்கும் பட்சத்தில் அது சட்டவிரோதமானதென அமைச்சு விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சதொச கிளைகளில் ஒரு கிலோ சீனி 102 ரூபாவுக்கு விற்னை செய்யப்படுகிறது.