பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தவர்களின் விபரங்கள், விரைவில் வெளிவரலாம்

இறுதி யுத்தம் மற்றும் இதுவரை காலமும், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை, உடனடியாக வெளியிடுமாறு, முப்படையினருக்கு உத்தரவிடப்போவதாகத்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதன் மூலம், வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களிலிருந்தும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றில், இது தொடர்பான கலந்துரையாடல்களையும் இன்று மேற்கொண்டார்.