திருகோணமலை மாவட்ட மென்பது இலங்கை அரசு மாத்திரமல்ல இந்தியா சினா போன்ற வெளிநாட்டு அரசுகளும் அவதானம் செலுத்துகின்ற மாவட்டமாகும்

இந்த சம்பூர் மண்ணிற்காக மக்கள் பட்ட அவலங்கள்  பல வெளிப்படையாக இந்த நுாலிலே வெளிக்கொணரப்பட்டுள்ளன.

இந்த நுால் சம்பூர் இடம்பெயர்வின்போது கொல்லப்பட்ட 18 பொது மக்களின் நினைவாக வெளிவந்திருப்பது மிகவும்  முக்கியமான விடயமாகும்”

என மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்..

நேற்று ஞாயிறு மாலை திருகோணமலை  சம்பூர் கலாசார மண்டபத்தில் சம்பூர் மகாவித்தியாலய முன்னாள் மாணவர்  வெளியக  சங்கத்தின்  ஏற்பாட்டில் வெளியிடப்பட்ட  ”சம்பூர் இடம்பெயர்வும் மீழ்குடியேற்றமும்” எனும் நுால் வெளியிட்டில் பாராளுமன்ற உறுப்பினர் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

இந்நுாலை டாக்டர் அ.ஸதீஸ்குமார் தொகுத்து வெளியிட்டிருந்தார். இது அவரது 6வது நுாலகும்.

 இந்நிகழ்வில் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் P.செல்வராசா. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின் இணைப்பாளர் பொ.சற்சிவானந்தம் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டதுடன் அவர்கள்    உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும்  கல்வி மான்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இலக்கிய கரத்தாக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இங்கு மேலும் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்,

இந்நிகழ்விலே  அந்த இடப்பெயர்வின்போது உயிர் நீர்த்த  மக்களுக்கான நினைவஞ்சலியை   முக்கியப்படுத்தி செலுத்தியுள்ளோம். அதற்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு நான் எனது பாராட்டை தெரிவிக்கின்றேன். அவர்களுக்கான சமர்பணமாக இந்நுாலை டாக்டர் ஸதீஸ் அவர்கள் வெளியிட்டிருப்பதும் மிகவும் முக்கியமான விடயமாகும். இந்த நுாலிலே இடம்பெயர்வின் போது மக்கள் பட்ட அத்தனை துன்பங்களும் வேதனைகளும் சம்பவங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.  அதனை தொகுத்த நுாலாசிரியர் டாக்டர் ஸதீஸ் அவர்கள் சகலராலும் பாராட்டப்பட வேண்டியவர். இந்நிகழ்விலும் பலரும் பாராட்டியுள்ளனர்.

இந்நுாலில் இடம்பெற்றுள்ள அனைத்து விடயங்களும் முற்றிலும் உண்மையானவை . ஏனெனில் அந்த மக்களின் அகதி வாழ்வின்போது நானும் எனது பங்கிற்கு பல்வேறு கரிசனைகளை காட்டியவன். மட்டக்களப்பு மாவட்டத்திலே 18 முகாம் களில் இந்த மக்கள் தங்கியிருந்தார்கள். அதன்போது நான் எமது மாட்ட இந்து இளைஞர் பேரவையூடாக பல புலம் பெயர் உள்ளங்களின் உதவியுடன் உதவிகளை நல்கியிருந்தேன். அதனால் அந்த மக்கள் பட்ட அனைத்து துன்பங்களையும் நாம் அறிந்திருந்தோம்.

 பிற்காலத்தில் கிளிவெட்டிபோன்ற பல  பிரதேசங்களில் இந்த மக்கள் முகாம்களில் இருந்த சந்தர்பத்தில் புலனாய்வாளர்கள் இவர்களுக்கான உதவிகளை  தொண்டு நிறுவனங்கள் வழங்க விடாது கடுமையாக தடுத்து வந்தனர்.  பல பொருட்களை திருப்பியும் அனுப்பியிருந்தனர். அதற்கு அதிகாரிகளும் துணைபோனனர். அதனை அறிந்த நான் மீண்டும் கிளிவெட்டிமுகாமிற்கு நிவாரண பொருட்களுடன் வந்து அவர்களது தடைகளை யும் மீறி உதவிகளைச்செய்தோம்.

அதனை இந்நுாலிலும் டாக்டர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பல விதமான துன்பங்களையும் மீறி மக்கள் தமக்கு தமது மண்தான் வேண்டும் என்பதில் உறுதியாக போராடினர். அதன்விளைவு சட்டத்திற்கு முரணாக  அரசால் திட்டமிட்டு வர்த்தமானி பிரகடனம் மூலம் சுவீகரித்து  எடுக்கப்பட்ட சம்பூர் மண்ணை மீட்கமுடிந்தது. இது திட்டமிட்டு சுவிகரிக்கப்ட்ட காணி. திருகோணமலை மாவட்ட மென்பது  இலங்கை அரசு மாத்திரமல்ல இந்தியா  சினா போன்ற வெளிநாட்டு அரசுகளும்  அவதானம் செலுத்துகின்ற மாவட்டமாகும். அவர்கள் எமக்குதவினாலும் அவர்கள் தமது நலனில் பாதுகாப்பில் அக்கறையாகவுள்ளனர். மகிந்த அவர்கள் தோற்காமல் இருந்திருந்தால் இன்று இங்கு சீன அரசாங்கமும் சம்பூரில்  காலுான்றி இருந்திருக்கும்.

 இந்த சம்பூர் மக்களின் போராட்டம் வடகிழக்கில் ஒரு முன்மாதிரியான போராட்டமாக அமைந்துள்ளது. அந்த மக்களின் உறுதியான போராட்டமும் அதன்பின்னர் நடந்த ஆட்சிமாற்றமும் தான் இந்த மண்மீட்பிக்கான முக்கியமான காரணமாக அமைந்திருந்தது.

சம்பூர் மக்களாகிய நீங்கள் உறுதியான நம்பிக்கையுடன் போராடிநீர்கள். பலரும் ஒற்றுமையுடன்  செயற்பட்டீர்கள். உங்களிடம் சிறந்த ஆளுமை இருந்தது. ஆனாலும் ஒரு சிலர் கிடைப்பதனை எடுத்துக்கொண்டு செல்வோம் எனச்செயற்பட்டதுமுண்டு. அதன்காரணமாக இன்று உங்களது போராட்டம்  பாராட்டப்படும் நிலமையை அடைந்தது. அந்த ஒற்றுமைதான் இன்று இந்த மண்ணை மீட்டுத்தந்தது.

 முக்கியமாக கட்நத ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனாவை முன்மொழிந்தவர் எங்களது இந்த மாவட்டத்தின் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினரும், தமிழி்தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் அவர்கள்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க அவர்கள் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் விடயம் தொடர்பாக முதன்முதலில் இரா சம்பந்தன் ஜாவிடம் கருத்துக்கேட்டிருந்தார். அதன்போது அவர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி அவர்களை முதன்முதலில் முன்மொழிந்திருந்தார்.

அதன்காரணமாகவே ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகமும் அவருக்கு வாக்களித்தது. தேர்தல் வெற்றியும் அமைந்தது. அதனால் மாற்றமும் நிகழ்நதது. இந்நிலையில் அதன் காரணமாக இந்த சம்பூர் மக்களின் வலுப்பெற்ற போராட்டத்திற்கு அந்த மாற்றம்  வெற்றியை கொண்டு வர சாதகமாக அமைந்தது.அதன்மூலமாக சம்பூர் மண் மக்களுக்கு கிடைத்தது.

 ஆனாலும் இந்த நாட்டில் நாம் இன்னும் இரண்டாம்தரப்பிரஜைகள் தான் உள்ளோம்.. ”வட்டமான மோதகமாக விருந்த ஆட்சியை கொழுக்கட்டயைாக நாம் மாற்றினாலும் கூட  அதனுள் உள்ள உள்ளடக்கம் ஒன்றாகத்தான் உள்ளன”.  அதனை அண்மைக்கால அனர்த்த அழிவுக்கான நிவாரண முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

 அண்மையில் தென்பகுதி  அனர்த்தத்தில் பெருமளவு சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.  எமது சிறுபான்மை சமுகத்தைச்சாரந்த தமிழ் முஸ்லீம்மக்களும் பாதிக்கப்பட்டார்.  அதற்காக நாமும் வருந்திய வண்ணமுள்ளோம்.அவர்களுக்கு உதவுவது முக்கியமான கடமையாகும். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் வடகிழக்கு பிரதேசங்களில் மக்கள்  கொத்துகொத்தாக அழிக்கப்பட்டார்கள். சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன.

 அப்போதெல்லாம் எடுக்காத முடிவை இந்த அனர்த்தத்தில் அரசு எடுத்து நஸ்ர ஈடாக 25 லட்சத்தை அறிவித்துள்ளது. ஏலவே பாதிக்கப்ட்ட எமது மக்கள் இன்னும் முறையான  நிவாரணமின்றி துன்பப்படுகின்றனர். இந்த நிலமையானது இந்த ஆட்சியிலும் நாம் இரண்டாம்தரப்பிரஜை என்பதனை வெளிப்படுத்திநிற்பதனையே கோடிகாட்டியுள்ளன. அந்த மக்களுக்கு  உதவத்தான்  வேண்டும். அழிந்த  எமது மக்களுக்கும் ஏன்  அவ்வாறு யோசிக்க முடியவில்லை என்பது கவலை  அழிக்கும் விடயமாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.