கரைச்சி பிரதேச சபையின் கிளிநொச்சி சந்தைக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

கரைச்சி பிரதேச சபையின் கிளிநொச்சி சந்தைக் கட்டிடம்
12.06.2017ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்கள நிதி ரூபா 10.25 மில்லியன் மற்றும் கரைச்சி பிரதேச சபை நிதி ரூபா 10.00 மில்லியன் செலவில் வடக்கு கிழக்கு உள்@ராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கரைச்சி பிரதேச சபையின் கிளிநொச்சி சந்தைக் கட்டிடம் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண சபையின் முதலமைச்சர் மாண்புமிகு நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 12.06.2017ஆம் திகதியன்று மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் ஹம்சநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபை கௌரவ உறுப்பினர்கள் வை.தவநாதன், பசுபதிப்பிள்ளை, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சு.அருமைநாயகம், வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் திரு.பற்றிக் டிறஞ்சன், கிளிநொச்சி மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.பிரபாகரன், அலுவலர்கள் மற்றும் கிளிநொச்சி வர்த்தகர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்..