மட்டக்களப்பு ஊறணியில் இடம்பெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.

மட்டக்களப்பு ஊறணி சரஸ்வதி வித்தியாலயமும் விழித்தெழு சமூகசேவைகள் அமைப்பும் நம்பிக்கையின் ஏணி நிறுவனமும் இணைந்து  போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரியொன்றைய இன்று (12) திங்கள் கிழமை பாடசாலையின் அதிபர் எம்.யோகானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.

குறித்த பாடசாலையில் ஒன்றுகூடல் முடிவடைந்த நிலையில் அவ் மாணவர்களுக்கு போதைப் பொருள் தொடர்பான விளக்கங்கள், அதன் தீமைகள், அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப் பாவனையினால் ஏற்படும் சமூக சீர்கேடுகள், பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு தொடர்பாக விளங்கங்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி ஆரம்பித்தது.

நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் மட்டக்களப்பு நம்பிக்கையின் ஏணி இணைப்பாளர் ஏ.ரூபன், நன்நடத்தை பிரிவு உத்தியோகத்தர், பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், விழித்தெழு சமூகசேவைகள் அமைப்புக்களின் உறுப்பினர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் போதைப் பொருள் பாவனையினால் ஏற்படும் தீங்குகள் தொடர்பான பதாதைகளை ஏந்தியவண்ணம் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.

பாடசாலை மட்டங்களில் இருந்து இவ்வாறான போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட போதைப் பேரணியானது பாடசாலை வளாகத்தில் இருந்து கொக்குவில் வீதி, பேச்சியம்மன் வீதி, திராய்மடு வீதி, புதிய எல்லை வீதியூடாக குறித்த பேரணி இடம்பெற்று மீண்டும் பாடசாலையை சென்றடைந்தது.

இதன்போது போதைப் பொருள் பாவனையின் தாக்கம் போதைப் பொருள் பாவனையை ஒவ்வொரு குடும்பங்கள் மட்டத்திலும் எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் போன்ற அறிவுறுத்தல் அடங்கிய துண்டுப் பிரசூரங்களும் விநியோகிக்கப்பட்டது..

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபாவனை அதிகாரித்த நிலையில் பாடசாலை மாணவர்கள் உட்பட பல குடும்பங்கள் தற்போது அன்றாட ஒருவேளை உணவுக்குக்குகூட திண்டாடுகின்ற நிலையில் மாவட்டத்தின் சனத் தொகைக்கு ஏற்ப 15க்கு உட்டபட்ட மது விற்பனை நிலையம் இருக்கவேண்டிய நிலையில் தற்போது 58க்கு மேற்பட்ட மது விற்பனை நிலையம், அதனோடு மாத்திரமின்றி கல்குடா கும்புறுமூலைப் பகுதியில் மதுவுக்கு மூலப்பொருளாக பயன்படும்  பாரிய எதனோல் தொழில்சாலை உற்பத்தி செய்யப்படுகின்ற குறிப்பிடத்தக்கது.