மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் கொடிவார ஆரம்பநிகழ்வு

(படுவான் பாலகன்) அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திடுவீர் என்ற தொனிப்பொருளில் நாடுமுழுவதும் அனுஸ்டிக்கப்படும் தேசிய கொடிவாரத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்கான கொடிவார ஆரம்ப நிகழ்வு இன்று(12) திங்கட்கிழமை இடம்பெற்றது.

 

பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், உதவி பிரதேச செயலாளர் ஆ.நவேஸ்வரன்;, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், நிருவாக உத்தியோகத்தர் ந.துரைராசா ஆகியோருக்கு கலாசார உத்தியோகத்தர்கள் கொடிகளை அணுவித்து ஆரம்பித்து வைத்தனர்.

இந்துசமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக, தேசிய இந்துசமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு வாரத்தினை, மூன்றுவயதில் ஞானம் பெற்ற குழந்தையான திருஞானசம்பந்தரது குருபூசை தினமான ஜீன் 10ந் திகதி முதல் ஜீன் 16ம் திகதி வரை நாடுமுமுவதும் அனுஸ்டிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.